Dharmapuri

News October 20, 2024

சாலையில் தேங்கிய சகதியில் நாற்று நட்டு போராட்டம்

image

காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி அருகே சாலையில் மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இவ்வழியே செல்லும் பொது மக்கள் அவதி அடைந்து வருகின்றனர். ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போதும் இது நீடித்து வருவதால் பொதுமக்கள் சகதியில் நாற்று நட்டு சாலை அமைக்க கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். மேலும், ஊராட்சி தலைவர் சாலையை சீரமைப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

News October 20, 2024

தர்மபுரி மாவட்டத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பொழிந்து வரும் நிலையில், இன்று (அக்டோபர் 20) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை (அக்டோபர் 21) தர்மபுரி மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், அண்டை மாவட்டங்களான திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News October 20, 2024

தர்மபுரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பொழிந்து வருகிறது. இந்த நிலையில், இன்று(அக்டோபர் 20) வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தர்மபுரி மாவட்டத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நேற்று நள்ளிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பொழிந்தது குறிப்பிடத்தக்கது.

News October 20, 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு

image

தீபாவளியின் போது சீட்டு நடத்துபவர்கள் தயாரிக்கும் இனிப்புகளுக்கு, உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி, உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் பெற்று விற்க வேண்டும். மேலும், மக்கள் பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கும் விவர சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். உணவு பொருட்கள் தொடர்பான புகார்கள் இருப்பின் 9444042322 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News October 19, 2024

பென்னாகரம் சிறுவனுக்கு மாவட்ட ஆட்சியர் உதவி

image

தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை சேர்ந்த அப்சர் என்ற சிறுவன் குடும்ப வறுமையின் காரணமாக தனது தந்தைக்கு ஆதரவாக டீ கடையில் வேலை செய்து வந்துள்ளார். இச்செய்தியை அறிந்த மாவட்ட ஆட்சியர் மாணவனுக்கு அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடு வழங்க நேற்று உத்தரவிட்டுள்ளார். மேலும், அவனது படிப்பிற்கு தேவையான உதவிகளையும் செய்வதாக கூறியுள்ளார். 

News October 19, 2024

தருமபுரி பாமக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம்

image

சென்னையில் இன்று (அக் 19) தர்மபுரி மாவட்ட நகர, பேரூர் ,ஒன்றிய செயலாளர்களின் ஆலோசனை கூட்டமானது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தர்மபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் இரா அரசாங்கம் மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் 2026 தேர்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

News October 18, 2024

காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

image

Telegram, WhatsApp போன்ற சமூக வலைதளங்களில் டிரேடிங் மூலமாக பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என வரும் லிங்குகளை நம்பி ஏமாற வேண்டாம். முதலில் சிறிய லாபத்தை கொடுத்து, பின்னர் அதிக முதலீட்டு செய்ய சொல்லி ஏமாற்றலாம் என்று கூறி தர்மபுரி மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களுக்கு  எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

News October 18, 2024

தருமபுரி கல்வி கடன் மற்றும் தொழில் கடன் வழங்கல்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் இன்று நடைபெற்ற தொழிற்கடன் வசதியாக்கல் மற்றும் கல்விக் கடன் முகாமில் 24 நபர்களுக்கு ரூ.12.76 கோடி மதிப்பீட்டில் தொழிற்கடன் மற்றும் கல்வி கடன்களை மாவட்ட ஆட்சித்தலைவர், கி. சாந்தி வழங்கினார். உடன் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர், பிரசன்ன பாலமுருகன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

News October 18, 2024

தர்மபுரி மாவட்டத்திற்கு மஞ்சள் அலெர்ட்

image

தமிழ்நாட்டில் அக்டோபர் 18, இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், போன்ற 16 மாவட்ட ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் வருகின்ற 20 ஆம் தேதி தருமபுரி மாவட்டத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 18, 2024

தருமபுரியில் கனமழைக்கு வாய்ப்பு

image

வடதமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை தொடரும் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்ப்பட்டுள்ளது.

error: Content is protected !!