Dharmapuri

News October 22, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25/10/2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டுறவுகள் நடைபெறுகிறது. எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News October 21, 2024

ஏ.கே தண்டாவில் மின்னல் தாக்கி இரு பசு மாடுகள் உயிரிழப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பொழிந்து வந்த நிலையில் இன்று காலை ஏகே தண்டா பகுதியில் மேச்சலுக்காக புல்வெளியில் கட்டப்பட்டிருந்த இரண்டு பசு மாடு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மின்னல் தாக்கி இரு பசு மாடுகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News October 21, 2024

தருமபுரியில் குவிந்த 466 மனுக்கள் 

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 21) மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி, உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 466 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார். 

News October 21, 2024

தருமபுரி ஆட்சியரை சந்தித்த வீரர், வீராங்கணைகள்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகள் மாவட்ட ஆட்சியரை இன்று (அக் 21) நேரில் சந்தித்து, வாழ்த்துபெற்றனர். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஆகியோர் உடன் இருந்தனர். 

News October 21, 2024

தர்மபுரியில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது

image

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் கலெக்டரிடம் மனுக்களாக வழங்கப்பட்டது.

News October 21, 2024

அரசு உரிமம் பெற்ற பலகாரங்கள் மட்டுமே விற்பனை

image

தீபாவளியின் ஒரு பகுதியாக பலகாரங்களும் இடம்பெறுவது வழக்கம். பலகாரங்களை உற்பத்தி செய்பவர்கள் https://foscos.fssai.gov.in என்ற தளத்தில் உரிமம் பெற்று தகுந்த தரத்துடன் அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தயாரிக்கும் பலகாரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் உணவு பொருள் சம்பந்தமான புகார்களுக்கு 94 44 04 23 22 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News October 21, 2024

தங்கப் பதக்கம் பெற்ற கல்லூரி மாணவர்

image

மாநில அளவில் முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப் போட்டியில் மருதம் நெல்லி ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சி.சமுத்திரம் தங்கப் பதக்கம் பெற்றார். சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கில் 18.10.2024 அன்று நடைபெற்ற தமிழக அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கான பொதுப்பிரிவில் தடகளப் போட்டியில் 100 மீட்டர் பிரிவில் சாதனை படைத்துள்ளார்.

News October 21, 2024

தருமபுரி எஸ் பி அலுவலகத்தில் காவலர்கள் வீரவணக்க நாள்

image

தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதில் எஸ்பி அலுவலகத்தில் உள்ள காவலர் வீரவணக்க நினைவு தூணுக்குத் தர்மபுரி மாவட்ட எஸ்பி மகேஷ்வரன் மற்றும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி உள்ளிட்ட அதிகாரிகள் கையில் கருப்புப் பட்டை அணிந்து மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். இதில், மாவட்ட காவலர்கள் பலர் பங்கேற்றனர், 

News October 21, 2024

பட்டுக் கூடு அங்காடியில் ரூ 1.13 கோடிக்கு விற்பனை

image

தர்மபுரி அரசு பட்டுக் கூடு அங்காடியில் நடக்கும் தினசரி ஏலத்தில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்கின்றனர். இம்மாதம் 15 நாளில் நடந்த பட்டுக்கூடு ஏலத்தில 340 விவசாயிகள் 604 குவியல்லாக 2185 கிலோ வெண்பட்டுக் கூடுகளை கொண்டு வந்தனர். இவை கிலோ463 ரூபாய்க்கு ஏலம் போனது. கடந்த 15 நாட்களில் ரூ. 1.13 கோடிக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News October 21, 2024

தர்மபுரி அருகே பிறந்தநாளன்று உயிரிழந்த குழந்தை

image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நேற்று தனது பிறந்தநாள் அன்றே  4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பச்சன்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளியான சதிஷ்குமார்,ஐஸ்வர்யா தம்பதியரின் மகன் அகிலன். வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த பம்பு செட் மின் மோட்டார் பெட்டியை தொட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

error: Content is protected !!