Dharmapuri

News November 17, 2024

தருமபுரியில் விஜய் போட்டி?

image

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தருமபுரி மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவு ஆலோசனை கூட்டத்திற்கு பின் த.வெ.க கட்சியின் மாவட்ட தலைவர் சிவா இந்த தகவலை தெரிவித்துள்ளார். தருமபுரி மக்களே உங்கள் கருத்து என்ன? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE IT

News November 17, 2024

தருமபுரி அதிகாரிகளுக்கு ஆணையர் அறிவுறுத்தல்

image

தருமபுரியில் நேற்று நடைபெற்ற வாக்காளர்கள் சிறப்பு முகாமிற்கு, வாக்காளர் பட்டியல் பார்வையாளரான ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத் ராஜ் ஆணையர் ஆனந்தகுமார் வருகை புரிந்தார். மேலும், அவரது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், உரிய விசாரணை மேற்கொள்ளாமல் வாக்காளர் பட்டியலில் உள்ள எந்தவொரு பெயர்களையும் நீக்க கூடாது. அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் முகாம்கள் குறிப்பிட்ட தேதிகளில் நடைபெறும் என்றார்.

News November 16, 2024

தர்மபுரி மக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

image

அறிமுகம் இல்லாத நபர்களுடன் சமூகவலைத்தளங்களில் Chat செய்யும்போது மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். உங்கள் உரையாடலை பதிவு செய்து அச்சுறுத்த பயன்படுத்தலாம். மேலும் இதுபோன்ற புகார் ஏதேனும் இருப்பினும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம். மேலும், சைபர் கிரைம் தொடர்பு எண்; 1930 மூலம் புகார் அளிக்கலாம் என தர்மபுரி மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

News November 16, 2024

அகில இந்திய வானொலி நிலையத்தில் பணி புரிய வாய்ப்பு 

image

தர்மபுரியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் பகுதி நேர அறிவிப்பாளர்கள் மற்றும் தொகுப்பாளர்கள் (RJ) தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில் 20 முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு  இடைநிலை பட்டம் பெற்றதாக இருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: 31/11/2024 என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க. 

News November 16, 2024

டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் 

image

தருமபுரி மாவட்டத்தில் டாக்டர் அம்பேத்கர் விருது-2024 வழங்கப்பட உள்ளது. இந்த விருது பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்கு அரிய தொண்டு செய்பவர்களுக்கு  ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை பெற விரும்புவோர் தங்களது முழு விவரங்களுடன் 20/11/2024 க்குள் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். 

News November 16, 2024

சிறுபான்மையினருக்கு கடன் உதவி: கலெக்டர் தகவல்

image

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதாரம் மேம்பாட்டு கழகம் மூலம் தனிநபர் கடன் சுய உதவி குழுக்களான சிறு தொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், கல்விக் கடன் திட்டம் ஆகிய பல்வேறு திட்டங்கள் மத்திய கூட்டுறவு வங்கி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த வாய்ப்பினை தருமபுரி மாவட்டத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News November 16, 2024

தருமபுரியில் ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனை கூட்டம் 

image

தருமபுரியில் ஒருங்கிணைந்த மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு ஆலோசனைக் கூட்டம் கிழக்கு மாவட்ட  செயலாளர் தடங்கம் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. ஆ.மணி எம்.பி முன்னிலையில் உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் ஆலோசனை வழங்கி சிறப்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில், ஒருங்கிணைந்த மாவட்ட ஆதி திராவிட நல குழுத் தலைவர், துணைத் தலைவர், மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News November 15, 2024

தீர்த்தமலை அடிவார சாலையை சீரமைக்க கோரிக்கை

image

அரூர் அருகே உள்ள தீர்த்தமலையில் அமாவாசை, பௌர்ணமி நாட்களில் அதிக கூட்டம் காணப்படுகிறது. அவ்வாறு வரும் பக்தர்கள் பேருந்து நிறுத்தத்திலிருந்து சிறிது தூரம் நடந்து சென்றுதான் மலை ஏற துவங்குகின்றனர். பஸ் நிறுத்தம் முதல் மலை அடிவாரம் வரை உள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது.எனவே தீர்த்தமலை அடிவார சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News November 15, 2024

சின்னமிட்டஅள்ளி பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது

image

 காரிமங்கலம் சின்னமிட்டஅள்ளி ஊ. ஒ. தொ பள்ளிக்கு சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் கேடயத்தை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று சென்னையில் வழங்கினார். காரிமங்கலம் வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை, பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமணன், உதவி ஆசிரியர் புஷ்பராஜ் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். விருது பெற்ற பள்ளி நிர்வாகத்திற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

News November 15, 2024

குடும்ப அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்கள், நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்கள் பெற விருப்பமில்லை எனில் அவர்களது உரிமத்தினை பொது விநியோகத்திட்ட வலைதளமான www.tnpds.gov.in என்ற இணையதள முகவரி மூலமாக பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றிக் கொள்ளலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!