Dharmapuri

News October 10, 2024

ரேஷன் கடைகளில் வேலை: உடனே விண்ணப்பியுங்கள்

image

தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், தருமபுரி மாவட்டத்தில் 58 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <>க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம்.

News October 10, 2024

தருமபுரியில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

காற்றழுத்த தாழ்வு பகுதி, வளிமண்டல சுழற்சி என பல காரணங்களால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இன்று 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தருமபுரி மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News October 10, 2024

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

image

வடகிழக்கு பருவமழை, வெள்ளம் குறித்த தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முன்எச்சரிக்கையாக இருக்கும் பொருட்டு தமிழக அரசு (TNAlert app) செயலியை அறிமுகம் செய்துள்ளது. 24×7 மணி நேரமும் இலவச தொலைபேசி எண் 1077 (ம) 04342-231077 என்ற எண்ணிலும் பேரிடர் தொடர்பான புகார்களை அளிக்கலாம். இச்செயலியை மக்கள், அனைத்துதுறை அலுவலர்களும் பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News October 9, 2024

நியாய விலை கடை விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பம்

image

தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படும் நியாய விலை கடைகளுக்கு விற்பனையாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் தகுந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து www.drbdharmapuri.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் நவ 7ஆம் தேதி அன்று பிற்பகல் 5.00 மணி வரை வரவேற்கப்படுகின்றன. வேண்டுவோர்க்கு ஷேர் செய்யவும்.

News October 9, 2024

தருமபுரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று மாலை 4 மணி அளவில், தமிழக முதலமைச்சர் தேர்தல் கால வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம், சிறப்பு காலமுறை தொகுப்பூதியம், மதிப்பூதியம், காலமுறை ஊதியம் ஆகியவற்றை வழங்க கோரி தமிழ்நாடுஅரசு ஊழியர்கள் சங்கத்தினர் அறைகூவல் விடுத்த படி மாலை நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News October 9, 2024

மோளையானூர் மாணவிகள் மாவட்ட போட்டிக்கு தேர்வு

image

பாப்பிரெட்டிப்பட்டி சரக அளவில் நடைபெற்ற குடியரசு தின விழா கைப்பந்து போட்டியில் சீனியர், ஜூனியர் இரு பிரிவில் மோளையானூர் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆசிரியர்கள் மற்றும் ஊர்பொதுமக்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியருக்கு பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

News October 9, 2024

தர்மபுரிக்கு புதிய மாவட்ட செயலாளர் தேர்வு

image

தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளராக எம் ஒட்டப்பட்டியை சேர்ந்த மு ஈஸ்வரனை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் நேற்று (08/10/2024) நியமனம் செய்துள்ளார். அவருக்கு பசுமை தாயகம் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழ்நாடு உழவர் பேரியக்கம் தலைவர் ஆலயமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.மேலும், கட்சியினர் பலர் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

News October 9, 2024

தர்மபுரி எம்.பி தலைமையில் கண்காணிப்பு குழு கூட்டம்

image

தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத்தலைவர் / தருமபுரி எம்.பி ஆ.மணி, தலைமையில் மாவட்ட வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் செயலர் / மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி முன்னிலையில் நடைபெற்றது.

News October 8, 2024

தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் நியமனம்

image

தமிழ்நாடு அமைச்சரவையில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்ட பின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிலையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தருமபுரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக வேளாண் மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர். கே பன்னீர் செல்வம் நியமிக்கப்பட்டுள்ளார்.

News October 8, 2024

விண்வெளி வார விழா விழிப்புணர்வு பேரணி

image

தருமபுரி பச்சமுத்து கல்வி நிறுவனங்கள் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையம் இணைந்து இரண்டாவது நாள் விண்வெளி வார விழா விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. இதில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். எஸ் மகேஸ்வரன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பச்சமுத்து கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள், பள்ளி கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.