Dharmapuri

News January 8, 2025

சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய வாய்ப்பு 

image

தாட்கோ மூலமாக பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரிய சர்வதேச விமான போக்குவரத்தால் அங்கீகரிக்கப்பட்ட (IATA-CANDA) நிறுவனத்தால் பயிற்சி வழங்கப்படவுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

தொப்பூர் சாலை விரிவாக்கம் தொடர்பாக ஆய்வுக் கூட்டம்

image

நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் காணிகாரஅள்ளி கிராமத்தில் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் தொப்பூர் சாலை விரிவாக்கத்திற்கான பூர்வாங்கப் பணிகளை துரிதப்படுத்துவதற்காக துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி ஆகியோர் இருந்தனர்.

News January 7, 2025

Group-II & IIA தேர்வுகளுக்கு பயிற்சி- ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ), ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேரவாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது என தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இன்று தெரிவித்துள்ளார். இதற்கு www.tahdco.com-ல் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க. 

News January 7, 2025

முக்குலத்தில் 100 சதவீதம் கருவேல மரம் அகற்றம்

image

முக்குலம் ஊராட்சியில் 100 சதவீதம் கருவேல மரங்களை அகற்றிய ஊராட்சி மன்ற தலைவருக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார். கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி நிர்வாகிகள், மக்கள், தன்னார்வலர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் வனத்துறையினர் ஆகியோர் உதவியுடன் ஏரிகளில் உள்ள சீமை கருவேலன் மரங்களை அகற்றும் பணி தொடங்கியது. முக்குலம் ஊராட்சியில் உள்ள 5 ஏரிகளில் முற்றிலும் சீமை கருவேல மரம் அகற்றப்பட்டது.

News January 7, 2025

மின்தடை தொடர்பான புகார்களை தெரிவிக்க எண்கள்

image

தருமபுரியில் மின்தடை, மின் கம்பிகளின் மீது உரசும் மரக்கிளைகளை அகற்ற உள்ளிட புகார்களை தெரிவிக்கலாம். இலவச எண்: 1912, 1800 425 3306, வாட்சப் எண் : 94458 86385 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம் என  மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க. 

News January 6, 2025

மாவட்ட அளவிலான கட்டுரை போட்டி

image

தருமபுரி மாவட்ட தமிழ் வளர்ச்சி துறை சார்பில் 2024/2025 ஆம் ஆண்டில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே தமிழ் பேச்சு ஆற்றலையும், பண்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் ஜனவரி 21, 22 அன்று தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் என இன்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

News January 6, 2025

பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்தில் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தையுடன் நிரந்தர அறுவை சிகிச்சை செய்திருந்தால் ரூ.50.000 டெபாசிட் பத்திரம் வழங்கப்படும் என்றும், இரு பெண் குழந்தைகள் இருந்தால் ரூ. 25,000 வீதம் ரூ.50,000 டெபாசிட் வழங்கப்படும் என்றும் ஆட்சியர் சாந்தி அறிவித்துள்ளார். விவரங்களுக்கு தருமபுரி மாவட்ட அலுவலக தொலைபேசி எண் 04342-233088க்கு  தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க. 

News January 6, 2025

மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் 388 மனுக்கள்

image

தருமபுரி மாவட்டத்தில் இன்று (ஜன.06) மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை மனுக்களாக வழங்கினர். இதில் மொத்தம் 388 மனுக்கள் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற பல்வேறு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அறிவுறுத்தி உள்ளார்.

News January 6, 2025

தருமபுரியில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு 

image

தருமபுரியில் வரைவு வாக்காளர் பட்டியளை ஆட்சியர் சாந்தி வெளியிட்டார். இதில், பாலக்கோட்டில் 2,44,243 பேர், பெண்ணகரத்தில் 2,52,043 பேர், தருமபுரியில், 2,68,424 பேர், பாப்பிரெட்டிப்பட்டியில் 2,62,873 பேர், அரூரில் 2,50,334 பேர் என மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6,43,962 ஆண் வாக்காளர்களும், 6,33,783 பெண் வாக்காளர்களும், 172 மூன்றாம் பாலினத்தினர் என மொத்தமாக 12,77,917 பேர் பட்டியலில் உள்ளனர். 

News January 5, 2025

மாரத்தான் போட்டியை துவக்கி வைத்த ஆட்சியர்

image

அண்ணா பிறந்த நாளையொட்டி இன்று ( ஜனவரி 5 ) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்  பள்ளி கல்லூரி மாணவர்கள் மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார். ஆண்கள், பெண்கள், அரசு ஊழியர்கள் என மூன்று பிரிவுகளில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில்  எம்.பி மணி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!