Dharmapuri

News January 10, 2025

விவசாயிகளுக்கு மின் மோட்டார் மானியம்: கலெக்டர்

image

தமிழ்நாடு அரசு வேளாண்மை இயந்திர மக்கள் திட்டத்தின் கீழ் 2024/2025 நிதியாண்டில் 5.13 லட்சம் மதிப்பிலான 187 மின் மோட்டார் மானியத்தில் வழங்கப்படும் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறையை 04346296077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News January 9, 2025

தாட்கோ மூலம் பயிற்சி பெற வாய்ப்பு

image

மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று(ஜன.9)  வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தொழில் நுட்பபயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது.  இப்பயிற்சி முடித்த உடன்,  பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என 

News January 9, 2025

அரூரில் வாகன தணிக்கையில் ரூ.4.49 லட்சம் அபராதம் வசூல்

image

அரூரில் கடந்த மாதம் மொத்தம் 302 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டுள்ளன. இதில் 90 வாகனங்களுக்கு ரூ. 3.17 லட்சம் அபராதமும், முறையாக வரி செலுத்தாத வாகனங்களிடமிருந்து ரூ. 1.31 லட்சம் ரூபாய் வரியும் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், விதியை மீறியதாக 16 வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கடந்த மாதம் மொத்தம் ரூ. 4.49 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

News January 9, 2025

எஸ்பி தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்

image

தர்மபுரி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைத்தீர்க்கும் முகாம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் தருமபுரி மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமில் 70 கோரிக்கை மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 70 மனுக்கள் மீதும் உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் நேற்றைய முகாமில் 28 புதியதாக மனுக்கள் பெறப்பட்டது.

News January 9, 2025

 புதிய தொழிற்பள்ளிகள் துவக்க ஆட்சியர் அறிக்கை

image

2025-2026 ஆம் கல்வியாண்டிற்கு புதிய தொழிற்பள்ளிகள் துவங்குதல், அங்கீகாரம் புதுப்பித்தல், தொழிற்பள்ளிகளில் புதிய தொழிற் பிரிவுகள் / தொழிற்பிரிவுகளில் கூடுதல் அலகுகள் துவங்குதல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரவேற்கப்படுகின்றன. 02.01.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

News January 9, 2025

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு 3 நாட்கள் முன்பு பதிவு செய்ய வேண்டும்

image

எருது விடும் நிகழ்ச்சியில் 150 வீரர்களுக்கு மிகாமல் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடத்த அனுமதிக்கப்படுகிறது. ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு நிகழ்ச்சி நடைபெறும் தேதியிலிருந்து 3 நாட்கள் முன்பு பதிவு செய்து, ஜல்லிக்கட்டு விழாக்குழுவினர் மூலம் அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும். மேலும், அடையாள அட்டைஇல்லாத வீரர்கள் ஜல்லிக்கட்டு வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 8, 2025

தருமபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்,மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று (08.01.2025) நடைபெற்றது. அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.எஸ். மகேஸ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் திகவிதா, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

News January 8, 2025

ஆட்சியர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

image

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாலஜங்கமனஅள்ளி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் இராகாயத்ரி, தனித்துணை ஆட்சியர் (சபாதி) சுப்பிரமணி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மக்கள் கலந்துகொண்டனர்.

News January 8, 2025

 காவல்துறை குறைத்தீர் கூட்டத்தில் 1850 மனுக்களுக்கு தீர்வு

image

தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் புதன்கிழமை தோறும் நடைபெறுகிறது. கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 1850 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டுள்ளது. காவல்துறை நடத்தும் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு பொதுமக்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது என நேற்று காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 8, 2025

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்டத் தேர்வு அறிவிப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் 2024-2025ஆம் கல்வி ஆண்டிற்கான 8ஆம் வகுப்புக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு திட்டத் தேர்வு 22.02.25 அன்றும், 9ஆம் வகுப்பிற்கான ஊரகத்திறனாய்வு தேர்வு 01.02.25, 10ஆம் வகுப்பிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு 25.01.25 அன்றும் நடைபெற உள்ளது. எனவே, அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களும் மாணவர்களுக்கு உரிய பயிற்சிகள் வழங்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!