India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாலக்கோடு அடுத்த பெருங்காடு ஊ.ஒ.ந பள்ளி தலைமை ஆசிரியை கலைவாணி. இவர் 5ஆம் வகுப்பு மாணவிகள் 3 பேரை தினமும் கழிவறை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தியதாக, மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அது உண்மை என்பது தெரிந்தது. தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திராவின் உத்தரவின் பேரில் தலைமை ஆசிரியை கலைவாணி 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மண்டலத்தில் உள்ள திருப்பத்தூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து 20ஆம் தேதி வரை 180 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகைக்கு ஊர்களுக்கு செல்ல நேற்று முதல் 14ஆம் தேதி வரை 5 நாட்களும், இதேபோல் ஊர் சென்றவர்கள் திரும்புவதற்கு ஏதுவாக ஜனவரி 16ஆம் தேதியில் இருந்து 20ஆம் வரையிலும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

தருமபுரி ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். பயணிகள் பாதுகாப்பு மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க, தருமபுரி வழியாக வரும் ரெயில்களில் ஜி.ஆர்.பி. மற்றும் ஆர்.பி.எப். போலீசார் சோதனை மேற்கொண்டனர். ரயில் பயணத்தின் போது, உடைமைகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச.திவ்யதர்ஷினி தலைமையில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி முன்னிலையில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் தருமபுரி மாவட்டத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பயிர் சேதங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு குறித்து, துறை அலுவலர் ஆய்வுக் கூட்டம் நடந்தது.

தர்மபுரி ஆட்சியர் சாந்தி வெளியிட்ட அறிக்கையில், ”தமிழர் திருநாளான பொங்கலுக்கு முதல் நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சில பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். இந்நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள், தேவையற்ற விவசாய கழிவுகள் இதுபோன்ற செயல்களை தடை செய்த உயர்நீதிமன்றம் பழைய மரம்வறட்டி தவிர வேறு எதையும் எரிப்பதற்கு தடை விதித்தது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

தர்மபுரி மாவட்டத்தில் 2 நாள்கள் மதுகடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். அதன்படி, திருவள்ளுவர் தினம்(ஜன.15) மற்றும் குடியரசு தினம்(ஜன.26) அன்று மதுக்கடைகள் இயங்காது. மேலும் விதியை மீறி மதுபான கூடங்கள் மது விற்பனையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழின் முன்னணி செய்தி நிறுவனமான Way2News Appல் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, புலிக்கரை, வெள்ளிச்சந்தை உள்ளிட்ட தாலுகாக்களில் செய்தியாளராக விருப்பமுள்ளவர்கள் கீழ்கண்ட லிங்கில் இந்த லிங்கில் <

தருமபுரி அரசு மருத்துவமனையில் இதுவரை HMPV வைரஸ் தொற்று பாதிப்பு யாருக்கும் கண்டறியப்படவில்லை. மேலும் HMPV வைரஸ்தொற்று அறிகுறி கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க 20 படுக்கைகளுடன் சிறப்பு வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் மக்கள் மாஸ்க் அணியவும் மருத்துவமனை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு வேளாண்மை இயந்திர மக்கள் திட்டத்தின் கீழ் 2024/2025 நிதியாண்டில் 5.13 லட்சம் மதிப்பிலான 187 மின் மோட்டார் மானியத்தில் வழங்கப்படும் என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர் வேளாண்மை பொறியியல் துறையை 04346296077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று(ஜன.9) வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் தாட்கோ மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தொழில் நுட்பபயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. இப்பயிற்சி முடித்த உடன், பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என
Sorry, no posts matched your criteria.