Dharmapuri

News January 17, 2025

ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் படுகாயம்

image

தருமபுரி அருகே சோகத்தூர் கூட்ரோடு பகுதியில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்த பொது எதிர்பாராத விதமாக திடீரென்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுனர் தீபக் (35), கணேசன் (39) மற்றும் ரவி (34) ஆகிய மூன்று பேரும் படுகாயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 

News January 17, 2025

வேலைவாய்ப்பற்றோருக்கு உதவித்தொகை: ஆட்சியர்

image

வேலைவாய்ப்பற்றோா் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 10ஆம் வகுப்பு தவறியவர்களுக்கு மாதம் ரூ.200ஆம், தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300ஆம், மேல்நிலைக்கல்வி முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 என வழங்கப்படும். கல்விச்சான்றுகள் அசல், நகல்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் பிப்.25ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News January 17, 2025

காரிமங்கலத்தில் எருது முட்டியதில் வாலிபர் பலி

image

காரிமங்கலம் அருகே ராமாபுரம் மண்டுவில் நேற்று எருதாட்டம் நடைபெற்றது. இதில் 7க்கும் மேற்பட்ட எருதுகள் கலந்து கொண்டன. எருதுகள் சீறிப் பாய்ந்த போது கெரகோட அள்ளியைச் சேர்ந்த சுதர்சன் (25) ராமாபுரத்தைச் சேர்ந்த சந்திரசேகர்(30) ஆகியோர் எருது முட்டியதில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுதர்சன் உயிரிழந்தார். இது குறித்து காரிமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2025

தருமபுரியில் நாளை எங்கெல்லாம் மின்தடை?

image

தருமபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம், அதியமான்கோட்டை, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி, தொட்டம்பட்டி, இருமத்தூர் துணை மின்நிலையங்களில் உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணி நடைபெறுவதால் பென்னாகரம், இண்டூர் ஏரியூர், அக்ரஹாரம், காரிமங்கலம் கெரகோடஹள்ளி , இருமத்தூர், சமத்துவபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும். ஷேர் செய்யுங்க

News January 15, 2025

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஆட்சியர் மரியாதை

image

குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை திறந்து 25 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு, திருவள்ளுவர் தினத்தையொட்டி மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று (15.1.2025) மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News January 13, 2025

ஒரே ஆண்டில் அரசுக்கு ரூ. 3.40 கோடி வருவாய்

image

2024ஆம் வருடத்தில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலக செயலாக்க பணிகள் மூலம் ஆரசுக்கு மொத்தம் ரூ.3 கோடியே 41 லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார். மேலும் வாகன சோதனையின் மூலமாக அரசுக்கு சாலை வரியாக ரூ.1.70 கோடியும், இணக்க கட்டணமாக ரூ.73 ஆயிரமும், வாகன சோதனை மூலம் பல்வேறு குற்றங்களுக்கு இணக்க கட்டணமாக ரூ. 1.60 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது. 

News January 13, 2025

இந்திய விமானப்படையில் அக்னிவீர் ஆட்சேர்ப்பு

image

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இந்திய விமானப்படையில் சேர விரும்புவோர் ஜன.7 முதல் ஜன 27 வரை விண்ணப்பிக்கலாம். வருகின்ற மார்ச். 22 அன்று இணைய வழியில் தேர்வு நடைபெறும். எனவே, தருமபுரி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள நபர்கள் இருபால்(ஆண்/பெண்) கல்லூரி மாணவர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பம் செய்து கலந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

2025-ஆம் ஆண்டிற்கான முன்மாதிரி விருது ஆட்சியர் அறிவிப்பு

image

திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் எதிர்ப்புகளையும் மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து பல்வேறு துறைகளில் முன்னேறியவர்களில் ஒருவக்கு 2025-ஆம் ஆண்டிற்கான முன்மாதிரி விருது ஜன.15ல் வழங்கப்பட உள்ளது. இவ்விருத்திற்கு ரூ.1,00,000 காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் https://award.tn.gov.in என்ற தளத்தில் பதிவு செய்யலாம் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்தார்.

News January 13, 2025

2024-ம் ஆண்டில் 62 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

image

தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 2024-ம் ஆண்டில் 62 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குழந்தை திருமணங்கள் நடத்தியது தொடர்பாக 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, இதில் தொடர்புடைய 61 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குழந்தை திருமணம் செய்து கொள்ளும் பெண்களுக்கு ஏற்படும் உடல் நல மற்றும் மனநல பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

News January 12, 2025

ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

image

நல்லம்பள்ளி வாரச்சந்தையில் நேற்று, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சிறப்பு ஆட்டுச்சந்தை நடந்தது. இதில், 700க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு, 4,000 -முதல், 20,000 ரூபாய் வரை விற்பனையாகின. அதன்படி, ஒரு கோடி ரூபாய் அளவுக்கு, ஆடுகள் விற்பனையானதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!