India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO)மூலம் மேனேஜர், நிறுவன செயலாளர் உள்ளிட்ட பதவிகள் நிரப்பப்படுகிறது. இதற்கு தகுதியும், ஆர்வமுள்ளவர்கள் வரும் 24ஆம் தேதிக்குள் <
அரசு மானியத்தில் நாட்டு கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க ரூ.25.00 லட்சம் வரையும், செம்மறி ஆடு ,வெள்ளாடு பண்ணை அமைக்க ரூ10.00 லட்சம் முதல் ரூ. 50.00 லட்சம் வரையும், பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க ரூ. 15.00 லட்சம் முதல் ரூ. 30.00 லட்சம் வரையும், வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு தீவன தொகுதி, மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணையம் அமைத்திட மானியம் வழங்கப்படுகிறது என ஆட்சியர் தகவல்.
கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி தர்மபுரி மாவட்டத்தில் மர்மமான முறையில் இளைஞர் ஒருவர் உயிர் இழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் சிங்காபுரம் வனப்பகுதியில் யானை சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தப்பியோடியதாக கூறப்பட்ட ஏமனூர் இளைஞர் செந்தில் மர்மமான முறையில் உயிர் இழந்தார். இது மாநில அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் (07/04/25) இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டு மனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 808 மனுக்களை வழங்கியுள்ளனர். இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவுறுத்தி உள்ளார்.
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே நெருப்பூர் வனப்பகுதியில் யானையை கொன்ற வழக்கில் வனத்துறையிடம் தப்பி ஓடியதாக கூறப்பட்ட செந்தில் சரகாடு வனப்பகுதியில் அழுகிய நிலையில் மீட்கப்பட்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் இது தற்கொலை அல்ல கொலை என்று குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், இவ்வழக்கு இன்று சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
ஏழுர் பிள்ளையார் கோவில், சாலை விநாயகர் கோயில்- தருமபுரி, கணேசசாமி கோவில் – நாகமரை, ராககான பிள்ளையார் கோவில்-நடுஅள்ளி, பசுவண்ண பிள்ளையார் கோவில்- பென்னாகரம், பாலி விநாயகர் கோவில்-அரூர், ஆகாசவிநாயகர் கோவில்-குரும்பட்டி, சுந்தரவிநாயகர் கோவில்- கம்பைநல்லூர், இரட்டை விநாயகர் கோவில்-பாரூர், ஜோதி விநாயகர் கோவில்-பாலக்கோடு, சக்தி விநாயகர் கோவில்-சந்தைப்பேட்டை.*கண்டிப்பாக போங்க. நண்பர்களுக்கும் பகிருங்கள்
தர்மபுரி ஆவின் நிர்வாகத்தினர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தில் பால் உற்பத்தியில் தர்மபுரி உற்பத்தியாளர்கள் தினசரி 1.20 லட்சம் லி. சென்னைக்கு அனுப்புகின்றனர். மாவட்ட நுகர்வோர் தேவைக்கு ஒரு நாளுக்கு 7000 லிட்டர் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மாவட்டத்தில் 132 ஆவின் பாலகங்கள், 3 ஹைடெக் பாலகங்கள் என மாதம் ரூ.16.50 லட்சத்திற்கு பால் பாக்கெட்கள் விற்கப்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. <
பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை <
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கல்கூடப்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிள் மீது சரக்கு லாரி மோதியதில், நிதி நிறுவன ஊழியர் ராஜா பலியானார். இந்த தகவலறிந்த பாலக்கோடு போலீசார் விரைந்து சென்று, காயமடைந்தவரை அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தனர். ராஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.