India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரியில் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம் நாளை வியாழக்கிழமை காலை 9 மணி முதல் 12.30 மணி வரை. தருமபுரி அ.கொல்லஅள்ளி சென்னகேசவ பெருமாள் கோவில் வளாகத்தில் முகாம் நடைபெறுகிறது. இதில் இருதயம் சம்பந்தமான பரிசோதனை எக்கோ பரிசோதனை பரிசோதனை இலவசமாக பரிசோதிக்கப்படுகிறது. முகாமில் தர்மபுரி மாவட்ட மக்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். ஷேர் பண்ணுங்க
தமிழ்நாடு அரசு சார்பில், மருத்துவ துறை சார்ந்த முதியோர் பராமரிப்பு உதவியாளர் பயிற்சி தமிழ்நாடு முழுவதும் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் மூலம், முதியவர்களை பார்த்துக்கொள்ளும் வேலைவாய்ப்புகளை பெறலாம். 10ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். பயிற்சி – 3 மாதம். இதற்கு வயது வரம்பு கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டங்களில் உள்ள மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தினை அணுகவும். ஷேர் பண்ணுங்க
தருமபுரி மாவட்டம் மிட்டாநூலஅள்ளி கிராமத்தை சேர்ந்த கவிதா, 8 வருடங்களுக்கு முன்பு எட்டிமரத்துப்பட்டியைச் சேர்ந்த பிரபு என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று கவிதா தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பணிகள் சரியாக மேற்கொள்ளப்படாமல் இருந்தது. தூய்மை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரருக்கு ரூபாய் 10,000/- அபராதம் விதித்ததோடு, தனியார் ஒப்பந்ததாரரை மருத்துவமனையை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் எனவும், இதுபோன்ற தவறுகள் ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ் எச்சரித்தார். ஷேர் பண்ணுங்க
+2 பொதுத் தேர்வு இன்றுடன் முடிவடையும் நிலையில். பள்ளி மாணவர்கள் தங்களது உயர் படிப்பை “எங்கு படிக்கலாம் என்ன படிக்கலாம்”என்ற தலைப்பின் கீழ் நாளை மற்றும் நாளை மறுநாள் (மார்ச். 26,27) இரு தினங்களுக்கு. தர்மபுரி மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் ஹோட்டல் அதியமான் பேலஸில் இந்த இலவச உயிர் கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெறுகிறது. இச்செய்தியை 12-ஆம் வகுப்பு தேர்வு எழுதி முடித்த நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
தமிழக அரசின் அறிவிப்பையடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள், வரும் மார்ச் 31 ஆம் தேதிக்குள் தங்களுடைய நியாய விலைக் கடைக்கு சென்று கைரேகையை பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் குடும்பஅட்டை ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு ஷேர் பண்ணுங்க.
கொட்டுமாரன அள்ளியை சேர்ந்தவர் தலைகொண்டான் விவசாயி. இவர் டூவீலரில் பெரியாம்பட்டிக்கு சென்று விட்டு மீண்டும் ஊர் திரும்பிய போது, நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து காவல்துறை விசாரித்து வருகின்றது.
சேலத்தை சேர்ந்தவர் அந்தோணிராஜ், திருவண்ணாமலை அடுத்த தன் சகோதரர் வீட்டிற்கு, தாய் மல்லிகா, 64, 4 மகள்களையும் உறவினர் செல்வா என்பவரின் காரில், நேற்று முன்தினம் அனுப்பினார். கார் சேலம் – அரூர் தேசிய நெடுஞ்சாலையில் மஞ்சவாடி கணவாயை கடந்து செல்லும் பொழுது காரின் மீது லாரி மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலயே மல்லிகா உயிரிழந்தார்.மீதம் 4 பேரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
சேலம், டைடல் பார்க் நிறுவனத்தில், தொழில்நுட்ப உதவியாளர், நிர்வாக உதவியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,87,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்தப் பணியிடங்களுக்கு பி.இ / பி.டெக் முடித்தவர்கள் ஏப்.,2ஆம் தேதி வரை <
மத்திய அரசின் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. பயர்மேன், ரிஜ்ஜர், ஸ்கபோல்டர் என மொத்தம் 12 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்ய உள்ளனர். 18-45 வயதிற்குட்பட்டும், 10ஆம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு வடிவில் தேர்வுகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் இன்றைக்குள் (மார் 24) இந்த <
Sorry, no posts matched your criteria.