India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்டத்தில் இன்று 18 அனைத்து படைக்கல உரிமைதாரர்களும், படைக்கலன்களை அவர்களுடைய இருப்பிடத்திற்கு அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்து உரிய ஒப்புதல் சீட்டு பெற்றுக் கொள்ளவேண்டும். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுபெறும் தினத்திலிருந்து ஒரு வாரத்திற்கு பின்னர் தங்களது பொறுப்பில் திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி தேர்தல் தொடர்பான புகார்களை விசாரணை செய்யவும் தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்கவும் மாவட்டம் முழுவதற்கும் 45பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் தொடர்பான புகார்களை elections2024.dpi@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் கட்டணமில்லா தொலைபேசி எண்;1800 425 7017 மற்றும் 9363754335 என்ற whatsapp குறுந்தகவல் அளிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
2024-மக்களை தேர்தலில் 21 தொகுதிகளில் களமிறங்கும் திமுக, தருமபுரியில் களங்மிரங்குவதாக இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகுதியில் 2019 மக்களவை தேர்தலில், திமுக சார்பில் போட்டியிட்ட எஸ்.செந்தில்குமார் வெற்றி பெற்று எம்பியானார். இந்நிலையில் இந்த தேர்தலில் யார் இந்த தொகுதிகளில் களம் இறங்குவார் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.
பாலக்கோடு அடுத்த கோவிலூரான் கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் 35. இவர் மனைவி தெய்வானை. குடிப்பழக்கம் உடைய கணேசனை கண்டித்து கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதில் மணமுடைந்த கணேசன் கொசு மருந்து குடித்து மயங்கி நிலையில் கிடந்தார். அவரை தர்மபுரி ஜி.ஹெச்-சுக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். பாலக்கோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தருமபுரியில் வாட்ஸ்ஆப் முகநூல், இன்ஸ்டாகிராம், டெலிகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களிடமிருந்து வரும் வீடியோ கால்களுக்கு பதில் அளிக்க வேண்டாம், அதன் மூலம் உங்களுக்கு அசாதாரண சூழ்நிலை மற்றும் அச்சுறுத்தி பணம் பறிக்கலாம் என்று தருமபுரி மாவட்ட காவல் துறை பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி நேற்று X பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல்-2024 நடத்தை விதிகள் இன்று(மார்ச் 16) மாலை முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால், கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர் நாள் கூட்டம், விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம், மக்கள் தொடர்பு திட்டம் முகாம், உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் போன்றவை நடைபெறாது மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் விவரம்; 1.மாவட்டத் தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி கைபேசி எண்- 9444161000 2.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம்- 9884447581 3.மாவட்ட வருவாய் அலுவலர் பால் பிரின்சிஸ் ராஜ்குமார் -9445000908 4.மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சையது – 9445008135 இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
கோடை காலம் தொடங்கிவிட்டதால், தருமபுரி மாவட்டம் கோட்டப்பட்டி வன சரக்கத்திற்கு உட்பட்ட பகுதி வறண்டு காணப்படுகிறது. எனவே வன சாலைகளை பயன்படுத்துவோர் தீப்பற்ற கூடிய பொருட்கள் மற்றும் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம். மேலும் காட்டிற்குள் தீ வைக்கும் நபர்களை வனத்துறையில் பிடித்துக் கொடுத்தாலோ அல்லது தகவல் கொடுத்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள 39 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புமாறு மாவட்ட ஆட்சியருக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ₹11,100 – ₹35,100 ஊதியம் வழங்கப்பட உள்ளது. இதற்கு வயது வரம்பு: 21-37. கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 5ஆம் வகுப்பு தேர்ச்சி. கூடுதல் விவரங்களுக்கு, www.tn.gov.in-இல் அவ்வப்போது பார்வையிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.