India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தருமபுரி மாவட்ட வேளாண்மை அலுவலர்கள் சங்கத்திற்கு, நான்காவது முறையாக மாவட்டத் தலைவராக, காரிமங்கலம் உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணன், ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு, விவசாயிகள் மற்றும் வேளாண்மை அலுவலர்கள் தரப்பில் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தொப்பையாறு அணைப் பகுதியில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழைவெள்ள மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி, இன்று (செப்.6) நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஒத்திகை நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை வீரர்கள், மழைவெள்ள காலங்களில் மேற்கொள்ள வேண்டிய மீட்பு நடவடிக்கைகள் குறித்துப் பயிற்சி மேற்கொண்டனர். அப்போது, மாவட்டக் SP மகேஸ்வரன், DRO உடன் இருந்தனர்.
தர்மபுரி மக்களே கொய்யா, பப்பாளி, எலுமிச்சை உள்ளிட்ட செடிகள், தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை மற்றும் கீரை விதை அடங்கிய காய்கறி விதை தொகுப்பு இலவசமாக வழங்கப்படுகிறது. இதை விவசாயிகள்,பொது மக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். விண்ணபிக்க <
தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான பிரதம மந்திரி தேசிய தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் (PMNAM) வரும் 08.09.2025 அன்று தருமபுரி (கடகத்தூர்) அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் மாணவ மாணவிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் மாவட்டத்தில் 10 மற்றும் 12 வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புகளில் 2025 – 26 கல்வியாண்டில் சேர www.dmcdpi.tn.gov.in என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
உங்கள் செல்போன் காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
தமிழ்நாடு கிராம வங்கி போன்ற RRB கிராம வங்கிகளில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணி காலியாக உள்ளது. மொத்தம் 13,217 காலிப்பணியிடங்கள் உள்ளது. 18-40 வயதிற்குஉப்பட்ட டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த <
கிராம வங்கியில் ஆபீசர்கள் மற்றும் ஆபீஸ் அசிஸ்டென்ட்டுகள் பணிக்கு கட்டாயம் உள்ளூர் மொழி எழுத, படிக்க, பேச தெரிந்திருக்க வேண்டும். பிரிலிமினரி தேர்வு, மெயின்ஸ் தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விபரங்களுக்கு <
கொலைகார கணவாய் எனப்படும் தொப்பூர் கணவாயில் ஏற்படும் விபத்துக்களை தவிர்க்க தற்போது மலைப்பாதையில் உயர்மட்ட மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. 905 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. எச்சரிக்கை, வேகத்தடை, ரவுண்டானா போன்ற நடவடிக்கைகள் மூலம் விபத்துக்கள் ஓரளவு குறைக்கப்பட்டுள்ள நிலையில், உயர்மட்ட பாலம் தொப்பூருக்கு தீர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தருமபுரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் தர்மபுரி ரோட்டரி சங்கம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற உள்ளது. இன்று (செப்டம்பர் 6) தர்மபுரி – கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ரோட்டரி சங்கத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. முகாமில் கிட்ட பார்வை, தூரப்பார்வை, கண் சிவத்தல் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.