Dharmapuri

News May 19, 2024

தர்மபுரி அருகே விபத்து

image

அரூர் டூ சேலம் நெடுஞ்சாலையில் கோபிநாதம்பட்டி கூட்ரோடு அருகே தனியார் பள்ளிக்கு எதிரே நேற்று இரவு முன்னாள் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற கார், லாரியின் பின்னால் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் பயணம் செய்த திண்டுக்கலை சேர்ந்த பாசில் ரகுமான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 18, 2024

RTE25%இலவச கட்டாய கல்வி திட்டம்

image

தர்மபுரி; 2024-2024 ஆம் கல்வி ஆண்டில் RTE25% இட ஒதுக்கீட்டு மூலம் தனியார் பள்ளியில் சேருவதற்கு <>https://rteadmission.tnschools.gov.in/home?returnUrl=%2Freg-parent<<>> எனும் இணையதளம் மூலம் 20/05/2024 தேதிக்குள் விண்ணப்பம் பதிவு செய்ய வேண்டும். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 18, 2024

தக்காளி விலை அதிரடி உயர்வு

image

தர்மபுரி, பென்னாகரம் சந்தை திடலில் தக்காளி மார்க்கெட் அதிகாலை நடைபெற்றது. இந்நிலையில் தக்காளி வரத்து சரிவு காரணமாக இன்று ஒரே நாளில் கூடைக்கு ₹200 முதல் ₹250 வரை விலை உயர்ந்து. சந்தையில் ஒரு கிரேட் ₹650 முதல் ₹700 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் தக்காளி விலை உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

News May 18, 2024

சிறையில் கலெக்டர் திடீர் ஆய்வு

image

தருமபுரி மாவட்டம் சோகத்தூர் பகுதியில் அமைந்துள்ள தருமபுரி மாவட்ட சிறைச்சாலையை மாவட்ட ஆட்சியர் சாந்தி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் குறிப்புகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சியரின் ஆய்வின் போது உதவி சிறை அலுவலர் கிருஷ்ணகுமார். தருமபுரி வட்டாட்சியர் ஜெயசெல்வன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

News May 18, 2024

தர்மபுரி மழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.18) மாலை 4 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. தர்மபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 18, 2024

அரசு கல்லூரி முதல்வர் முக்கிய அறிவிப்பு

image

தர்மபுரி; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு https//www.tngasa.in என்ற இணையதள பக்கத்தில் 20/05/2024 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் மாணவ, மாணவிகள் வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தர்மபுரி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் தனது செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

News May 17, 2024

தர்மபுரி: நாளை கனமழைக்கு வாய்ப்பு

image

தர்மபுரி மாவட்டத்தில் நாளை (மே.18) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக் கடலில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நாளை தர்மபுரியில் கனமழை பதிவாகக்கூடும். சமீபமாக தமிழகத்தின் மழைப் பொழிவின் அளவு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

தர்மபுரி: மழைக்கு வாய்ப்பு!

image

தர்மபுரி மாவட்டத்தில் இன்று (மே.17) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் தர்மபுரியில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது. இன்று காலை முதலே தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 17, 2024

பென்னாகரம்: ஸ்ரீ அங்காளம்மனுக்கு மண்டல பூஜை

image

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த கருங்கல்மேடு பகுதியில் ஸ்ரீ அங்காளம்மன் மண்டல பூஜை நேற்று(மே 16) வெகு விமர்சியாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ அங்காள அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜைகள், சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கிடா வெட்டி பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

News May 16, 2024

தர்மபுரி அருகே விபத்து: ஒருவர் பலி

image

பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை டூ மாரண்டஹள்ளி செல்லும் வழியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நேற்று (15-5-24) இரவு பனை மரத்தில் மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!