Dharmapuri

News May 23, 2024

வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணி குறித்து கூட்டம்

image

தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல்-2024 வாக்கு எண்ணிக்கை நாளன்று மேற்கொள்ளப்பட வேண்டிய
முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்,
தேர்தல் பிரிவு அலுவலர்களுடான ஆலோசனைக்கூட்டம் நேற்று (22.05.2024) மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தலைமையில் நடைபெற்றது.

News May 22, 2024

தருமபுரி அரசு கல்லூரி மாணவன் சாதனை

image

தருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவன் சஞ்சய் அகில இந்திய மற்றும் தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் கைப்பந்து போட்டிகளில் பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். இதையடுத்து தர்மபுரி கல்லூரி முதல்வர் கண்ணன் அம்மாணவருக்கு  பாராட்டு சான்றிதழ், கோப்பைகள் மற்றும் பதக்கம் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார். உடன் சக பேராசியர்கள் இருந்தனர்.

News May 22, 2024

தருமபுரி : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

தருமபுரி மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தருமபுரியில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை

image

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவு அடைந்த நிலையில், 11ஆம் வகுப்பு சேர்க்கை இப்போது தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற்று வருகிறது. அதேபோல்தான் இன்று இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11-ம்வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதை ஆர்வமுடன் மாணவ, மாணவிகள் சேர்ந்து வருகின்றனர்.

News May 21, 2024

அரசு கல்லூரி சேர்க்கை விண்ணப்பம் கால நீட்டிப்பு

image

தர்மபுரி; அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு www.tngasa.in என்ற இணையதள முகவரியில் 06/05/2024முதல் தொடங்கியது. விண்ணப்பம் சமர்ப்பிக்க 20/05/24 இன்று இறுதி நாளாக இருந்தது. இன்னும் கூடுதல் மாணவர்கள் விண்ணப்பம் செய்யும் ஏதுவாக இணைய வழி விண்ணப்பம் செய்ய 24/05/2024 ஆக நீட்டிப்பு செய்யப்படுகின்றது.

News May 21, 2024

ஒகேனக்கலில் எம்எல்ஏ ஆய்வு

image

தர்மபுரி, பென்னாகரம் தொகுதி ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் எம்எல்ஏ ஆய்வு நிகழ்ச்சி (மே.20) நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் நேரில் சென்று பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் உள்ளிட்ட பொதுமக்களிடம் நிறை குறைகளை கேட்டறிந்து பார்வையிட்டார். இந்நிகழ்வு கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

News May 20, 2024

தொழிற்சாலையின் மேல் இருந்து கீழே விழுந்தவர் பலி

image

காரிமங்கலம் அருகே பைபாஸ் சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் எலக்ட்ரீசியனாக சேது(30) என்பவர் பணிபுரிந்து வந்தார். இன்று தொழிற்சாலையின் மேல் பகுதியில் வயர் இணைக்கும் பணியில் ஈடுபட்ட போது தவறி கீழே விழுந்தார். படுகாயமடைந்த அவரை தர்மபுரி
ஜி.ஹெ-ச்சுக்கு அழைத்து செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்து காரியமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News May 20, 2024

பாலக்கோடு அருகே குடும்பத்தோடு போராட்டம்!

image

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில், சிவக்குமார் என்பவர் தனக்கு சொந்தமான 6 சென்ட் நிலத்தை அளந்து தரக்கோரி கடந்த 6 ஆண்டுகளாக மனு அளித்து வந்துள்ளார். ஆனால் நிலத்தை அளந்து கொடுக்காமல் சர்வேயர் 6 ஆண்டுகளாக இழுத்தடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிவகுமார் குடும்பத்துடன் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டார்.

News May 20, 2024

தர்மபுரி கோட்டை கோயில் சிறப்புகள்!!

image

தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது கோட்டை கோயில் என்றழைக்கப்படும் மல்லிகார்சுனர் கோயில். இக்கோயில் கோட்டைக்கோயில், கோட்டை ஈஸ்வரன் கோயில், தகடூர் காமாட்சி கோயில், கோட்டை சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. கி.பி. எட்டு ஒன்பதாம் நூற்றாண்டுகளில், நுளம்பர் கட்டிய பல கோயில்களில் இக்கோயில் இதுவும் குறிப்பிடத்தக்கது. இக்கோயில் இறைவனை பழங்கால வெட்டுகள் சாணாயிரமுடையார் எனக் குறிப்பிடுகின்றன.

News May 20, 2024

அரசு கல்லூரியில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

image

அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-25ஆம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் பதிவு செய்ய (மே.20) இன்று இறுதி நாளாகும். இந்நிலையில் மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பம் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடர்பு கொள்ளலாம் -99417-77069, 99628-92406 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!