Dharmapuri

News March 8, 2025

மகளிா் தினத்தில் உறுதிமொழி எடுப்போம் 3/3

image

எதனால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது என்பதற்கு உறுதியான காரணம் இல்லை. 30 வயதைக் கடந்த பெண்களுக்கு எவ்வாறு மாா்கப் புற்றுநோய் பரிசோதனை அவசியமோ, அதுபோலவே 20 வயதுக்குப் பிறகு ஆண்டுக்கு ஒருமுறையாவது பெண்கள் இதய நலப் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். மகளிா் தினத்தில் இதய நலம் காப்பதற்கான உறுதிமொழியை அனைத்துப் பெண்களும் மேற்கொண்டால் ஆரோக்கியமான சமூகம் அமையப்பெறும். ஷேர் செய்யுங்கள்

News March 8, 2025

18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனா் 2/3

image

மினோகா, இனோகா என்ற 2 வேறு வகையான மாரடைப்பு பாதிப்பு இளம்பெண்களிடம் தற்போது அதிகரித்து வருகிறது. சா்க்கரை நோய், தவறான உணவுப் பழக்கம், உயா் ரத்த அழுத்தம், கொழுப்புச் சத்து, மரபணு பாதிப்பு, மன அழுத்தம் ஆகியவைதான் முக்கிய காரணம். இதயத்துக்குச் செல்லும் குறுநாளங்களில் அடைப்பு ஏதும் இன்றி ரத்த ஓட்டம் தடைபடும். மிகவும் சிக்கலான இந்த நோய்களுக்கு 18-45 வயது பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றர்.

News March 8, 2025

இளம்பெண்களிடையே அதிகரிக்கும் இதய பாதிப்பு 1/3

image

மாதவிடாய் பருவம் எட்டிய பெண்களுக்கு உடலில் ஈஸ்ட்ரோஜின் என்ற ஹாா்மோன் அதிக அளவில் சுரக்கும். ஈஸ்ட்ரோஜின் அதிகமாக சுரக்கும் பருவத்தில் உள்ள இளம்பெண்களுக்கு மாரடைப்பும், இதய நோய்களும் பரவலாக ஏற்படுகிறது. குறிப்பாக, இதய தசை செயலிழப்பு (காா்டியோ மையோபதி) அதிகரித்துள்ளது. அதிலும் 20 – 35 வயதுக்குட்பட்ட இளம்பெண்கள் பலா் அத்தகைய நோய்க்குள்ளாகி வருவதாக ஓமந்தூரார் மருத்துவமனை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

News March 8, 2025

மாணவிக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது

image

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இந்தப் பள்ளியில் பயிலும் 8ஆம் வகுப்பு மாணவிக்கு (13), அங்கு பணிபுரியும் மொரப்பூர் கலைஞர் நகரைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் முல்லைமொழி (23) என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில், அரூர் அனைத்து மகளிர் போலீசார் முல்லைமொழியை இன்று (மார்.7) போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News March 8, 2025

தனியார் உள்ளூர் சேனலில் ஆபாச படம்

image

தர்மபுரி மாவட்டத்தில் ஒளிபரப்பான தனியார் உள்ளூர் சேனல் ஒன்றில் நேற்று (மார்.7) ஆபாசப்படம் ஒளிபரப்பானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பொதுமக்கள் அரசு கேபிள் டிவி தாசில்தாருக்கு தகவல் தெரிவித்தனர். கேபிள் டிவி தாசில்தார் ராஜராஜன் கூறுகையில் , ”அந்த சேனல் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தது. உடனே ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. சேனல் உரிமையாளர் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.

News March 7, 2025

தர்மபுரி காட்டில் யானை வேட்டை: இருவர் சஸ்பெண்ட்

image

பென்னாகரம் வனச்சரகம் ஏமனூர் வனப்பகுதியில், கடந்த வாரம் யானை வேட்டையாடப்பட்டு தும்பிக்கை தனியாகவும், உடல் எரிக்கப்பட்ட நிலையிலும் கண்டெடுக்கப்பட்டது. இதை தடுக்க தவறிய நெருப்பூர் பிரிவு வனவர் சக்திவேல், ஏமனூர் பீட் வனக் காப்பாளர் தாமோதரன் இருவரையும், தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளார்.

News March 7, 2025

தருமபுரி முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

image

தருமபுரி மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளுக்கு மழையின் காரணமாக 16/10/2024 அன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. அன்றைய நாளில் ஈடுபட்ட வகையில் நாளை பள்ளிகள் வேலை நாட்களாக செயல்படும் என அறிவிக்கப்படுகின்றது என்று தருமபுரி முதன்மை கல்வி அலுவலர் அறிக்கை வெளியிட்டுள்ளார். மற்றவர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் வேலை

image

IDBI வங்கியில் உள்ள ஜூனியர் அசிஸ்டென்ட் மேனேஜர் பிரிவில் 650 காலிப் பணியிடங்கள் உள்ளன. பட்டப்படிப்பு படித்த 20-25 வயதுடையவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மற்றும் நேர்முகத்தேர்வு நடைபெறும். தேர்வு செய்யப்படுபர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளம் வழங்கப்படும். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வரும் 12ஆம் தேதிக்குள் இந்த லிங்கை <>க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். வேலையற்ற நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க

News March 7, 2025

அரசு கேபிள் டிவியில் ஆபாச படம்

image

தருமபுரி மாவட்டத்தில் அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ் வழியாக பல்வேறு தனியார் சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இதில், தருமபுரி நகராட்சி பகுதியில் குறிப்பிட்ட தனியார் சேனலில் ஆபாச படம் ஒளிபரப்பானதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் பார்வையிடும் சேனலில் இதுபோன்ற நிகழ்ச்சி ஒலிபரப்பு செய்யப்படுவது வருத்தம் அளிப்பதாக மக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விசாரித்து வருகிறது.

News March 7, 2025

ஷேர் ஆட்டோ கவிழ்ந்ததில் 9 பெண்கள் படுகாயம்

image

அரூர் அருகே ஷேர் ஆட்டோவில் பெண்கள் கூலி வேலைக்கு சென்றிருந்தனர். இதில், மொத்தம் 9 பெண்கள் பயணம் செய்த நிலையில் ஷேர் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 9 பெண்கள் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் காயங்களுடன் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!