India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி தலைமையில்(ஜூலை 23) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் கௌரவ்குமார், ஊரக வளர்ச்சித் துறையின் பொறியாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
தர்மபுரி மாவட்ட வன அலுவலர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மாவட்டத்தின் காவிரி தெற்கு வன உயிரின சரணாலயம், காவிரி வடக்கு வன உயிரின சரணாலயம் என 2 உயிரின சரணாலயங்கள் உள்ளன. இவற்றில் சிறுத்தை, யானை காட்டுமாடு உள்ளிட்ட பல வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர். எனவே இப்பகுதிகளில் கால்நடை மேய்ச்சலுக்கு முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பில் மாவட்ட அளவிலான ஆலோசனை குழு கூட்டம் தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி தலைமையில் நேற்று(ஜூலை 23) நடைபெற்றது. இந்த நிகழ்வில் மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர் பானுசுஜாதா, மேலாளர் தேன்மொழி, இணை இயக்குனர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
அரூர் அருகே வேப்பம்பட்டி ஊராட்சி
மாம்பாடி கிராமத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி இன்று அரூர் சட்டமன்ற உறுப்பினர்
வே சம்பத்குமார் அவர்களின் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது அதிமுக முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பாப்பாரப்பட்டியில் அமைந்துள்ள சுதந்திர போராட்ட வீரர் தியாகி சுப்ரமணிய சிவா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் இன்று(ஜூலை 23) மாவட்ட ஆட்சியர் சாந்தி, திமுக கிழக்கு மாவட்ட கழக செயலாளர் தடங்கம் பெ. சுப்ரமணி EX.MLA, ஆகியோர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தனர். இந்த நிகழ்வில் பாப்பாரப்பட்டி பேரூர் கழக செயலாளர் சண்முகம், சேர்மேன் பிருந்தா நடராஜன் உட்பட பலர் இருந்தனர்.
2024 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். இதில் தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீரை ஏரிகளுக்கு நிரப்ப வேண்டுல் தொடர்பாகவும் & மொரப்பூர் – தருமபுரி இடையே புதிய ரயில் சேவைக்கான நிதி ஒதுக்குதல், மேலும் தொப்பூர் கணவாய் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்ககுதல் போன்றவை இடம் பெறும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர். இதில் உங்களின் எதிர்பார்ப்பு என்ன?
பென்னாகரம், கிருஷ்ணாபுரத்தில் பாட்டியுடன் வசித்து வரும் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள பிரதிக்சாவின் தொடர் சிகிச்சை பரிசோதனைக்காகவும் ஆரோக்கியத்திற்காகவும் பென்னாகரம் வட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசு அலுவலர்களும் இணைந்து ரூ.1 லட்சத்திற்கான நன்கொடையை மாணவியின் பெயரில் தபால் நிலைய சேமிப்பு வங்கி கணக்கில் செலுத்தினர். அதற்கான வங்கி புத்தகத்தை கலெக்டர் சாந்தி மாணவியின் பாட்டியிடம் வழங்கினார்.
தமிழக சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு தர்மபுரி மாவட்டத்தில் நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் பொது பிரச்சனைகள் தொடர்புடைய மனுக்களை 5 நகல்களுடன் மனுதாரரின் கையொப்பமிட்டு தலைவர், தமிழ்நாடு சட்டப்பேரவை குழுக்கள், சென்னை 600009 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது ஆட்சியர் மூலமாக வரும் 31ஆம் தேதிக்குள் அனுப்பலாம் என்று ஆட்சியர் சாந்தி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் அரங்கில் நடைபெற உள்ளது. எனவே விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை சார்ந்த குறைகளையும் கருத்துக்களையும் கூறி பயன் பெறலாம் என தெரிவித்துள்ளார்.
பேஸ்புக் வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் முன் பின் தெரியாத நபர்களிடம் உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள் மற்றும் புகைப்படங்களை பகிர வேண்டாம் என்று தருமபுரி மாவட்ட காவல் துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சைபர் கிரைம்-க்கு 1930 எண்ணை அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.