India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மாவட்ட முழுவதும் குழந்தை இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள், மாற்றுத்திறனாளிக்கான இல்லங்கள், போதைப் பொருட்கள் அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களை பதிவு செய்ய https://tnhelth.tn.gov.in/tngovin/dme/dme.php என்ற இணையதளம் வாயிலாக 1 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டம், அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில், பொதுமக்களிடத்தில் அதிகப்படியான லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் தெரிவித்த நிலையில், இன்று தர்மபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் அரூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் பெருமாள் தலைமையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் லஞ்சமும் சிக்கும் என்ற எதிர்பார்ப்பில் சோதனை நடைபெற்று வருகிறது.
தர்மபுரி மாவட்டத்திற்கு பல்வேறு அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வருகை தர உள்ளனர். இந்நிலையில் இன்று இடம் தேர்வு பணிகளை தர்மபுரி எம்.பி.மணி, தர்மபுரி நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது மற்றும் திமுக கிழக்கு மா.செ.தடங்கம் சுப்பிரமணியன் பார்வையிட்டனர்.
தர்மபுரி நகராட்சியுடன் இலக்கியம்பட்டி ஊராட்சியை இணைப்பதை எதிர்த்து அதிமுக சார்பில் நாளை மறுநாள் (அக் 25) தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகாமையில் அதிமுக தர்மபுரி மாவட்ட செயலாளர் கேபி. அன்பழகன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அதிமுகவினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று (அக் 22) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தர்மபுரி சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கான பணிகள் முக்கிய கட்டத்தை எட்டி உள்ளது. மேலும், தொழிற்சாலைகள் துவங்க பல்வேறு நிறுவனங்கள் முன்வந்துள்ளன. எனவே, தொழிற்சாலை அமைக்க சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளை அமைக்க நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்யும் பணி விரைவில் தொடங்க உள்ளது என சிப்காட் அதிகாரிகள் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்ட பட்டாசு விற்பனையாளருக்கு, உரிய அனுமதி பெற்று பட்டாசு கடை வைக்க வேண்டும் எனவும், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி பசுமை பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் எனவும், 125 டெசிமலுக்கு மேல் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது எனவும், தடை செய்யப்பட்ட சீனா பட்டாசுகளை விற்பனை செய்யக்கூடாது என்பன போன்ற பல்வேறு விதிமுறைகளை அறிவித்து மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்ட மக்களின் நலன் கருதி, காவிரி உபரிநீர் திட்டத்தை பா.ம.க தொடர்ந்து போராடி கொண்டு வரும், என, பசுமை தாயகம் தலைவர் சவுமியா நேற்று நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேசினார். மேலும், தர்மபுரி மாவட்டத்தில் குடிநீர், விவசாயம் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முன்னுரிமை கொடுத்து போராடுவேன். காவிரி உபரிநீர் திட்டத்தை, பா.ம.க. தான் போராட்டம் நடத்தி கொண்டு வரும் அதற்காக நான் உங்களுடன் இருப்பேன் என கூறினார்.
தர்மபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 25/10/2024 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டுறவுகள் நடைபெறுகிறது. எனவே தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளின் கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும் கருத்துகளையும் எடுத்துக் கூறி பயனடையலாம் என கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பொழிந்து வந்த நிலையில் இன்று காலை ஏகே தண்டா பகுதியில் மேச்சலுக்காக புல்வெளியில் கட்டப்பட்டிருந்த இரண்டு பசு மாடு மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. மின்னல் தாக்கி இரு பசு மாடுகள் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 21) மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு பகுதி மக்களும் தங்களது குறைகளை எடுத்துரைத்து மனு வழங்கினர். இதில், பொதுமக்கள் இலவச பட்டா, இலவச வீட்டுமனை, இலவச ஸ்கூட்டர், மிதிவண்டி, உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம் போன்ற 466 மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி உத்தரவிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.