India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூர் மாவட்டத்தில் காலை 10 மணி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்ட தெய்வீக பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெமினி எம்.ஏன்.ராதா நேற்று அமைச்சர் பி.கே.சேகர்பாபுவை சந்தித்து மனு அளித்தார். அதில் சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் கொடி கம்பம் அமைக்கும் பணியை பொது தீட்சிதர்கள் தடுக்கின்றனர். அதனால் பொது தீட்சிதர்கள் கொடி கம்பம் அமைக்க ஒத்துழைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு காவல்துறை சார்பில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (31/10/2024) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராஜாராமன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் அமுதா, விருத்தாசலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி உதவி ஆய்வாளர் ஜெரினா, சேத்தியாதோப்பு காவல் ஆய்வாளர் வீரசேகரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளனர்.
தீபாவளி திருநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு குற்ற சம்பவங்களைத் தடுக்க கடலூர் எஸ்.பி. ராஜாராம் மேற்பார்வையில் மாவட்டத்தில் 7 உட்கோட்டங்களுக்கு உட்பட்ட டி.எஸ்.பி.க்கள் தலைமையில் மாவட்டம் முழுவதும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் போலீசார் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையும் நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாநகர பகுதியில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள், மாநகராட்சி அதிகாரிகள் மூலம் பிடிக்கப்படும். பின்னர் அவை உரிமையாளர்களுக்கு திரும்பி வழங்கப்படாமல் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் கால்நடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதுடன் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர ஆணையாளர் அனு இன்று தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாப்படும் நிலையில், பட்டாசுகளை கவனமாக வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் மேற்பார்வையில் குழந்தைகள் பட்டாசுகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். கையில் வைத்து பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்கவும். பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு பக்கெட் தண்ணீர் மற்றும் மண் வைத்திருப்பது அவசியம். விபத்தில்லா தீபாவளியை கொண்டாட கடலூர் மக்களுக்கு வே2நியூஸ் சார்பாக வாழ்த்துக்கள். SHARE IT.
வேப்பூர் கூட்டுப்பாதை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சேப்பாக்கம் நோக்கி சென்ற ஆட்டோ மீது பின்னால் வந்த கார் மோதி ஆட்டோவிற்கு முன்னால் சென்ற இரு சக்கர வாகனத்தில் மோதியதில் தொண்டாங்குறிச்சியை சேர்ந்த ரத்தினவேல் மகன் சுப்ரமணியன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த ஆட்டோவில் பயணம் செய்த 12 பேர் காயங்களுடன் வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை எழும்பூரில் இருந்து சிறப்பு ரயில் (எண் 06155) இன்று (அக்.,30) இரவு 9.10க்கு புறப்படுகிறது. இந்த ரயில் 8 முன்பதிவில்லா பெட்டிகளை கொண்ட ரயிலாக இயக்கப்பட உள்ளது. சென்னை எழும்பூரில் இன்று இரவு 9.10 மணிக்கு புறப்படும் இந்த ரயில், பண்ருட்டி கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை வழியாக திருச்சிக்கு நாளை காலை 5:45 மணிக்கு செல்கிறது. ஷேர் செய்யவும்
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று கடலூர் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மீனவர்களுக்காக எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை. SHARE IT.
கடலூரில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் அருகில் விதிகளை மீறி புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர். இதையடுத்து கடலூரில் மஞ்சகுப்பம் பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த 7 கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் கொடுக்கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.