Cuddalore

News November 3, 2024

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைப்பேசியின் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவியை மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கிட உத்தரவிட்டுள்ளது. அதனை பெற்று விவசாயிகள் பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 3, 2024

விருதையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 2 பேர் கைது

image

விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் வசந்தகுமார் (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட பிரச்சினையில் மணிகண்டன், குணா, முகிலவன் (25), நீலாம்பரன்(22) ஆகியோர் வசந்தகுமாரை தாக்கினர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து முகிலவன், நீலாம்பரன் ஆகியோரை கைது செய்தனர்.

News November 3, 2024

சிதம்பரத்தில் வாலிபர் கைது

image

சிதம்பரம் மருத்துவக் கல்லூரி அருகே கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு நிறுத்தி வைத்து திருடி சென்ற வாலிபரை கைது செய்யும் நோக்கத்தில் அண்ணாமலை நகர் காவல் துறையினர் ரோந்து பணிய ஈடுபட்ட போது இன்று ஸ்ரீராம் என்பவரை போலீசார் கைது செய்தனர். தப்பிக்க முயன்ற போது பாலத்தில் இருந்து குதித்துள்ளார். இதனால் கை முறிந்துவிட்டது. அவரை மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவரை போலீசார் கைது செய்தனர்.

News November 3, 2024

இளைஞரின் விரலை கடித்துத் துப்பிய தொழிலாளி

image

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த தீவலூரை சேர்ந்தவர் வீரச்செல்வன். அதே பகுதியை சேர்ந்த நவீன் என்ற சிறுவனை தொழிலாளி அருள் பாண்டியன் நேற்று தாக்கினார். இந்த தகராறை வீரசெல்வன் விளக்கிவிட்டதால் ஆத்திரமடைந்த அருள்பாண்டி, வீரச்செல்வனை தாக்கி அவரது வலது கை கட்டை விரலை கடித்து துப்பியுள்ளார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஷேர் செய்யவும்

News November 2, 2024

கடலூரில் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

image

கடலூர் வண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் தொழிலாளி சரவணன் (40). இவருடைய மனைவி சரண்யா. இந்த தம்பதிக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இதுவரை குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த சரவணன் இன்று காலை தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தன்னுடைய வேட்டியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 2, 2024

கடலூர்: தீபாவளியையொட்டி 15 கோடிக்கும் மேல் மது விற்பனை

image

கடலூர் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை ஒட்டி டாஸ்மாக் கடைகளில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. கடந்த 30ஆம் தேதி தீபாவளிக்கு முதல் நாள் 7.65 கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது. மறுநாள் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகை அன்று 8 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. இவ்விரு நாட்களிலும் சேர்த்து 15.65 கோடி ரூபாய் அளவில் விற்பனை நடந்துள்ளது.

News November 2, 2024

விருதை அருகே மின்னல் தாக்கி முன்னாள் அதிமுக கவுன்சிலர் பலி

image

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த ஏ.வல்லியம் கிராமத்தை சேர்ந்தவர் முன்னாள் அதிமுக ஒன்றிய கவுன்சிலர் மாயகிருஷ்ணன் (55). இவர் இன்று காலை அதே பகுதியில் உள்ள தனது விளை நிலத்திற்கு சென்றபோது பலத்த மழை பெய்தது. அப்போது திடீரென இடி மின்னல் தாக்கியதில் மாயகிருஷ்ணன் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 1, 2024

குள்ளஞ்சாவடியில் பைக் மோதி முதியவர் பலி

image

குள்ளஞ்சாவடி அருகே சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (70). இவர் இன்று அதே பகுதியில் உள்ள கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்வதற்காக சாலையை கடக்க முற்பட்ட போது, அவ்வழியே அதி வேகமாக வந்த பைக் ஒன்று அவர் மீது மோதியதில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

News November 1, 2024

கடலூர் மாவட்டத்தில் ரோந்து பணி அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டம் முழுவதும் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01/11/2024) கடலூர் காவல் ஆய்வாளர் சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் லட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சந்துரு, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு காவல் ஆய்வாளர் சேதுபதி ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 1, 2024

கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் பட்டாசு வெடித்து தீ விபத்து

image

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தற்காலிகமாக தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மதியம் வரை பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி மற்றும் சிதம்பரத்தில் தலா 1 பட்டாசு தீ விபத்து ஏற்பட்டது. அந்தந்த பகுதி தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தீயை துரிதமாக அணைத்தனர்.