Cuddalore

News November 5, 2024

வேப்பூரில் விஷம் குடித்து பெண் தற்கொலை

image

வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சியை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி கொளஞ்சி அம்மாள் (55). இவர் சிறுநீரக பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் நோய் குணமாகாததால் மன வேதனை அடைந்த கொளஞ்சி அம்மாள் இன்று விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2024

கடலூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை

image

சாலைகளில் பராமரிப்பின்றி  சுற்றித் திரியும் கால்நடைகள் பிடிக்கப்பட்டால் இனி திருப்பி தர இயலாது.  அவை அரசின் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என கால்நடை உரிமையாளருக்கு கடலூர் மாவட்ட ஆட்சிய ர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடந்த சட்டம் ஒழுங்கு குறித்த ஆய்வுக்கூட்டம், சாலையோர பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News November 5, 2024

கடலூரில் ஆற்றில் மூழ்கி முதியவர் உயிரிழப்பு

image

கடலூர் அடுத்த உச்சிமேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன் (70). இவர் இன்று காலை பெரிய கங்கணாங் குப்பத்தில் உள்ள ஆற்றின் கரைக்கு சென்று இயற்கை உபாதை கழித்துவிட்டு, அங்குள்ள தென்பெண்ணை ஆற்றில் கை கால்களை கழுவ இறங்கினார். அப்போது அவர் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து ரெட்டிச் சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 5, 2024

கடலூரில் பெண் எஸ்.ஐ. தற்கொலை முயற்சி

image

கடலூர் புதுநகர் காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பாண்டியன் மனைவி சுகன்யா. இவர் திட்டக்குடி காவல் நிலையத்தில் எஸ்.ஐ.ஆக பணியாற்றி வருகிறார். குடும்ப பிரச்சினை காரணமாக நேற்று இரவு எறும்பு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

News November 5, 2024

கடன் தொல்லையால் இளைஞர் தற்கொலை

image

புதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தை சேர்ந்தவர் தேவராஜ் மகன் சரவணன் (36). சூதாட்ட பழக்கமுடைய இவர் கடன் வாங்கி சூதாடி உள்ளார். இதனால் கடன் தொல்லை அதிகமானதால் மன வருத்தத்தில் காணப்பட்ட சரவணன் இன்று ரெட்டிச்சாவடி அருகே கம்பளிக்காரன் குப்பத்தில் உள்ள சுடுகாடு அருகில் தேக்கு மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரெட்டிச் சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News November 4, 2024

சிதம்பரம் அருகே வாலிபர் பலி

image

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அரிய கோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் 10 ஆண்டுகளாக கொத்தனார் வேலை செய்து வந்த நிலையில் இன்று அதிகாலை ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். இது குறித்து சிதம்பரம் இருப்புப் பாதை காவல்துறை சார்பில் சிறப்பு உதவி ஆய்வாளர் அருணா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 4, 2024

கடலூர் மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

முதல்வா் மாநில விளையாட்டு விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, கடலூா் மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தேசிய அளவிலும் பதக்கங்கள் பெற்ற இரு வீரர்கள்,பயிற்றுநா்கள், உடற்கல்வியாளர்களுக்கு ரூ.1 லட்சம், தங்கப்பதக்கம ஆகியவை வழங்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலா், கடலூா் என்ற முகவரிக்கு வரும் 11 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

News November 3, 2024

கடலூர் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் போக்குவரத்திற்கு இடையூறாகவும், பொதுமக்கள், மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. பிடிக்கப்படும் கால்நடைகள் திரும்பி வழங்கப்பட மாட்டாது. மேலும் கால்நடைகளுக்கு உரிமை கோரி வருபவர்கள் மீது சிறை தண்டனை விதிக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News November 3, 2024

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், கைப்பேசியின் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவியை மானிய விலையில் விவசாயிகளுக்கு அரசு வழங்கிட உத்தரவிட்டுள்ளது. அதனை பெற்று விவசாயிகள் பயனடையுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News November 3, 2024

விருதையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் 2 பேர் கைது

image

விருத்தாசலம் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் வசந்தகுமார் (35). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் இதுதொடர்பாக இன்று ஏற்பட்ட பிரச்சினையில் மணிகண்டன், குணா, முகிலவன் (25), நீலாம்பரன்(22) ஆகியோர் வசந்தகுமாரை தாக்கினர். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிந்து முகிலவன், நீலாம்பரன் ஆகியோரை கைது செய்தனர்.