India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாளையங்கோட்டை கீழ்பாதி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் மகன் மகேஷ் (12). இந்நிலையில் மகேஷ் நேற்று (செப்.14) தனது நண்பன் ஈஸ்வரன் (14) என்ற மாணவனுடன் காலை காடுவெட்டி நோக்கி சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது வானமாதேவி அருகே கும்பகோணம் நோக்கி சென்ற கார் ஒன்று சிறுவர்கள் பயணித்த சைக்கிள் மீது மோதியதில், மகேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து சோழத்தரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மக்களே, மத்திய அரசின் மின்சாரத்துறையில் காலியாக உள்ள 1543 இன்ஜினியர் மற்றும் சூப்பர்வைசர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.Sc, B.E., B.Tech, M.Tech. ME படித்தோர் விண்ணபிக்கலாம். சம்பளமாக மாதம் ரூ.30,000 முதல் ரூ.1,20,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய சட்டசபை தொகுதிகள் அடங்கிய கடலூர் மேற்கு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 4 லட்சத்து 51 ஆயிரத்து 16 பேர் திமுகவில் இணைந்துள்ளதாக கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான கணேசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த உங்கள் கருத்தை கமெண்டில் தெரிவிக்கவும். SHARE!
பண்ருட்டி அருகே உள்ள கணிசபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலா என்ற சதீஷ்ராஜ் (19). கூலித் தொழிலாளியான இவர், பண்ருட்டி அருகே 8-ம் வகுப்பு பயின்று வரும் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீசார் பாலாவை கைது செய்தனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விருதாச்சலம் அடுத்த முகாசபரூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு வகுப்பறை கட்டிடங்கள் திறப்பு விழா நேற்று (செப்.14.) நடைபெற்றது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் மதியழகன் தலைமை தாங்கினார். பள்ளி மேலாண்மை குழு தலைவர் கௌதமி முன்னிலை வகித்தார். நிகழ்வில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கனக கோவிந்தசாமி குத்து விளக்குகேற்றி வகுப்பறைகளை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்துப் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று (செப்.,14) கடலூர், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, திட்டக்குடி ஆகிய பகுதிகளில் இரவு ரோந்துப் பணிக்குச் செல்லும் காவல் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் காவல் துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மக்களே மக்களே தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறையில் காலியாக உள்ள Assistant பணியிடங்களை, நேர்முக தேர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன.
✅துறை: தமிழ்நாடு உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை
✅பணி: Assistant
✅கல்வி தகுதி: டிகிரி
✅சம்பளம்: ரூ.50,000 –
✅ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
✅கடைசி தேதி: 25.09.2025
✅அரசு வேலை எதிர்பார்ப்போருக்கு SHARE செய்து உதவுங்க..
கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக விட்டு விட்டு அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.,4) காலை 8:30 மணி நிலவரப்படி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 0.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதுமட்டும் இல்லாமல் மற்றும் எந்த இடங்களுக்கும் மழை பதிவாகவில்லை.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள இளநிலை புலனாய்வு அதிகாரி (Junior Intelligence Officer-II) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.. இதற்கு B.sc முடித்திருந்தால் போதும். மாதம் ரூ. 25,500 – 81,100 வரை சம்பளமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம், பண்ருட்டி, நெய்வேலி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட தாலுகா நீதிமன்றங்களில் நேற்று ‘லோக் அதாலத்’ எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் மாவட்டம் முழுவதும் 3,001 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில், 2,422 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.34.1 கோடி ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
Sorry, no posts matched your criteria.