India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மக்களே, விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <

கடலூர் நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநரின் அலுவலகப் பணிகளுக்காக, ஒதுக்கீடு செய்யப்பட்ட கழிவு செய்யப்பட்ட வாகனம் நவ.14ம் தேதி அன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் ஏலத்தில் கலந்து கொள்கிறவர்கள் 10% பிணையத்தொகை வரைவோலையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…

கடலூர் மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க இங்கு <

நாகை மாவட்டம் கோட்டைமேட்டு தெருவை சேர்ந்தவர் ரமேஷ்(33). இவர் பேஸ்புக் மூலம் குறைந்த விலைக்கு கார் விற்பனை செய்வதாக கூறி பலரிடம் மோசடி செய்தார். இதுதொடர்பாக கடலூர் சைபர் கிரைம் போலீசார் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் பரிந்துரைபடி, ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவுபடி நேற்று ரமேஷ், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <

புவனகிரி அருகே சாக்காங்குடி சேர்ந்தவர் அருண்ராஜ(34). இவர் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு, வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, குடிபோதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அருண்ராஜை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநரின் அலுவலகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கழிவு செய்யப்பட்ட வாகனம் நவ.14ம் தேதி அன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஏலத்தில் கலந்து கொள்கிறவர்கள் 10% பிணையத்தொகை வரைவோலையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் வட்டம், முதனை பெரியாண்டவர் கோயில் அருகில் உள்ள மயானத்தில் புதருக்குள் நேற்று (நவ.1) அடையாளம் தெரியாத ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்ததுள்ளது. இதனை கண்ட கிராம மக்கள் ஊ.மங்களம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில், போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (01.11.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.