India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேமுதிக போட்டியிடுகிறது. இந்த நிலையில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக தேமுதிக முன்னாள் எம்.எல்.ஏ சிவக்கொழுந்து போட்டியிடுவார் என தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடலூர் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக இயக்குனர் தங்கர் பச்சன் அறிவிக்கப்பட்டுள்ளார். மக்களவைத் தேர்தல் 2024 வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக தமிழகம், புதுவையில் பாஜக கூட்டணி சார்பில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 9 தொகுதிகளுக்கு பாமக சார்பில் தற்போது வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

கடலூரில் பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. பாரதிய ஜனதா கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடலூர் மற்றும் காஞ்சிபுரம், அரக்கோணம், தருமபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விருத்தாசலத்தில் ஆர்.டி.ஓ., அலுவலகம், தாலுகா அலுவலகம், ஒன்றிய அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள், வேளாண் அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. இங்கு மனுக்களுடன் வரும் பொது மக்கள், அதிகாரிகளை சந்தித்து குறைகளை தெரிவித்து வந்தனர்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அரசு அலுவலகங்கள் வெறிச்சோடியது. இதனால், அப்பகுதிகளில் உள்ள ஓட்டல்கள், டீ, கூல்டிரிங்ஸ் கடைகளிலும் வியாபாரம் சரிந்தது.

பாராளுமன்ற பொதுத் தேர்தலை 2024-ஐ முன்னிட்டு கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்தில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், கடலூர் பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான செலவின பார்வையாளர்கள்
தபஸ் லோத், பிரம்மானந்த் பிரசாத் ஆகியோர் முன்னிலையில் இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (21/03/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார், சிதம்பரம் காவல் ஆய்வாளர் ரமேஷ்பாபு, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் ராமலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் பாக்கியராஜ் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர், திருப்பாதிரிப்புலியூர், சீரடி சாய்பாபா ஆலயத்தில் பங்குனி மாத வியாழக்கிழமையை முன்னிட்டு, இன்று சாய்பாபாவிற்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம் மற்றும் ஆராதனை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாய்பாபாவை வழிபட்டனர். தொடர்ந்து பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

திராவிட முன்னேற்றக் கழக கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்படி, கடலூர் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் எம்.ஆர்.கே.பி கதிரவன், கடலூரில் OMR (ஒ.எம்.ஆர்) படிவம் நிரப்பும் பணிகள் குறித்தும், நாடாளுமன்ற தேர்தல் பணி குறித்தும் ஆலோசனைகளை இன்று வழங்கினார். உடன் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் முன்னிட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் கடலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெரியகாட்டுப்பாளையத்தில் இன்று பாண்டிச்சேரியைச் சேர்ந்த சுரேந்திரபால் என்பவர் உரிய ஆவணமின்றி ரூ.78 ஆயிரத்து 300 ரூபாயை எடுத்து சென்றார்.இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அவரிடமிருந்து 78,300 ரூபாயை பறிமுதல் செய்து, கடலூர் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்.

கடலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் அண்ணா தலைமை தாங்கினார். மத்திய குழு உறுப்பினர் வாசகி சிறப்பு உரையாற்றினார். இந்த கூட்டத்தில் என்எல்சி சுரங்க நிறுவனத்தின் 7 சதவீத பங்குகளை விற்பனை செய்யக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும் மாதவன் நன்றி தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.