Cuddalore

News April 1, 2024

அழகர் கோவிலில் சிறப்பு வழிபாடு

image

கடலூர் அடுத்த தென்னம்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள அழகர் கோவிலில் இன்று பங்குனி மாத திங்கட்கிழமையை முன்னிட்டு, ஸ்ரீ அழகு முத்து அய்யனார், ஸ்ரீ பூரணி அம்பாள், ஸ்ரீ பொற்கலை அம்பாள் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.

News April 1, 2024

கடலூர் அருகே மருத்துவ பரிசோதனை

image

கடலூரில் கடந்த இரண்டு நாட்களாக முதுநகர் வஸந்தராயன் பாளையம் பகுதியில் இருந்த குப்பை கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த பகுதி மக்கள் பாதிப்பு அடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு சுவாச பிரச்சனை, கண் எரிச்சல் போன்று வேறு ஏதேனும் உடல் உபாதைகள் உள்ளனவா என மருத்துவ குழு பரிசோதனை செய்தனர்.

News April 1, 2024

கடலூரில் தேர்தல் வீதிமுறைகளை மீறிய திமுக

image

கடலூரில் நேற்று அமைச்சர் உதயநிதி திமுக கூட்டணி கட்சி காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத்துக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதற்காக மஞ்சக்குப்பம், பாரதி சாலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி திமுகவினர் கட்சி கொடி, பேனர்களை அதிக அளவில் வைத்தனர். இதையடுத்து தேர்தல் அதிகாரி உத்தரவின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார், கட்சி கொடி, பேனர்களை அதிரடியாக அகற்றினர். இதனால் திமுகவினரிடையே பரபரப்பு நிலவியது.

News April 1, 2024

பா.ம.க. சின்னம் வரையப்பட்ட சுவர் உடைப்பு

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ம.க.வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து கட்சியினர் ஆண்டார்முள்ளிப்பள்ளத்தில் உள்ள ஒரு வீட்டின் சுவரில் மாம்பழ சின்னத்திற்கு ஆதரவு கேட்டு விளம்பரம் வரைந்திருந்தனர் . இந்த சுவரை நேற்று மர்மநபர்கள் உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இதனால் திடீர் பதற்றம் ஏற்பட்டது.இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 31, 2024

கடலூரில் திமுக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் பிரச்சாரம்

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து, திராவிட முன்னேற்றக் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் தமிழன் பிரசன்னா கடலூரில் வரும் 6-ஆம் தேதி சனிக்கிழமை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 31, 2024

கடலூர்: பிரச்சார கூட்டத்தில் த.வா.க பங்கேற்பு!

image

இண்டியா கூட்டணியின்
கடலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் விஷ்ணுபிரசாதிற்கு ஆதரவாக திமுக சார்பில் கடலூரில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில், தமிழக வாழ்வுரிமை கட்சியின்
மாநில நிர்வாககுழு உறுப்பினர் மற்றும்
மாநகர அமைப்பு குழு தலைவர் தி. கண்ணன் தலைமையில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞர் பிரிவினர் திரளாக கலந்து கொண்டனர்.

News March 31, 2024

கடலூர்: குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

image

கடலூர் முதுநகரில் எந்தவொரு தெரு பகுதிகளுக்கு சென்றாலும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதால், பொதுமக்கள் வீடுகளில் இருக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். மேலும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதுதொடர்பாக பலமுறை புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே குவிந்து கிடக்கும் குப்பைகளை முறையாக அள்ள அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

News March 31, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுப்பு

image

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் பாராளுமன்ற மக்களவை தேர்தல் திருவிழா தங்கள் அருகாமையில் உள்ள வாக்குச்சாவடியில் நடைபெறுகிறது. இவ்விழாவில் தங்கள் வருகை தந்து தவறாமல் தங்களது வாக்கினை பதிவு செய்து நமது மாவட்டத்தில் 100% வாக்குபதிவு நடத்தி தங்கள் உரிமையை நிலைநாட்ட வேண்டுமென கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் அழைப்பு விடுத்துள்ளார்.

News March 31, 2024

கடலூர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த துணை மேயர்

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் விசிக, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விசிக கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் மேலிட பொறுப்பாளர் தாமரைச்செல்வனை அவரது இல்லத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதையடுத்து தாமரைச்செல்வன், வேட்பாளர் விஷ்ணு பிரசாரத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

News March 31, 2024

கடலூரில் 19 வேட்பாளர்கள்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடலூர் தொகுதியில் கடந்த 27ஆம் தேதியுடன் முடிந்த வேட்புமனு தாக்கலில் 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 5, சுயேட்சைகள் 11 பேர் என தேர்தல் களத்தில் 19 வேட்பாளர்கள் உள்ளனர் என கடலூர் ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!