India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட சின்னப்பன் தெரு பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் (ம) மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் தலைமையில் வயது முதிர்ந்த வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு உறுதிமொழி இன்று (03.04.2024) அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. உடன் மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

விருத்தாசலம் மணிமுத்தாறு, குடியிருப்பு பகுதியில் ஏராளமான பன்றிகள் சுற்றி திரிகின்றன. இவை அங்குள்ள கழிவு நீர் வாய்க்கால், குப்பைகளை மேய்ந்து வீடுகளில் அருகாமையிலேயே படுத்து கிடக்கின்றன. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அப்பகுதி மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களின் வலியுறுத்தி உள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூரில் மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு மூத்த வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். தொடர்ந்து வெற்றிலை பாக்கு பழம் ஒரு தட்டில் சீர்வரிசை பொருட்களை மூத்த வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது.

கடலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் தங்கர்பச்சானை ஆதரித்து அக்கட்சி தலைவர் அன்புமணி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசுகையில், ‘தங்கர்பச்சானை பொது வேட்பாளராக பார்க்க வேண்டும் அவரை வெற்றி பெற செய்தால் மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பார் மற்றவர்களை தேர்வு செய்தால் கடலூர் வீணாகி விடும்’ என்று தெரிவித்தார்.

கடலூர் லோக்சபா தொகுதிக்குட்பட்ட மந்தாரக்குப்பம், கங்கைகொண்டான், பழைய நெய்வேலி, மேல்பாதி, கீழ்பாதி,வடக்கு வெள்ளூர், உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கேரளா,திருப்பூர், உள்ளிட்ட மற்ற பகுதிகளில் வேலை செய்து வருகின்றனர்.அவர்கள் வேலை செய்யும் இருப்பிடம் குறித்து சேகரித்து வருகின்றனர். அவர்களிடம் தொடர்பு கொண்டு தங்கள் ஓட்டு எங்களுக்கே எனவும் தங்கள் வந்து போகும் செலவை ஏற்று கொள்வதாக கூறி வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி கடலூர் திமுக கட்சியா அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆதரித்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக மாநகர செயலாளர் ராஜா தலைமை தாங்கினார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகளான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரஸ்வதி வேலுச்சாமி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஸ்ரீதர் மற்றும் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கடலூர் அடுத்து உச்சிமேடு ஊராட்சியை சேர்ந்தவர் லதா (55). இவர் நேற்று இரவு சென்னையில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது மர்ம நபர்கள் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகை கொள்ளையடித்துள்ளனர். இதுகுறித்து தகவலின் பேரில் ரெட்டிசாவடி போலீசார் மோப்பநாய் உதவியுடன் நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

புவனகிரியில் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 % வாக்குப்பதிவை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ராஜூ, தனபதி ஆகியோர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து பேரணி துவங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக 100% சதவீதம் வாக்களிப்போம் என முழக்கங்களுடன் பேரணி நடைபெற்றது. இதில் வருவாய்துறையினர், மகளிர் சுய உதவி குழுவினர், காவல்துறையினர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் இன்று பயிற்சி வகுப்பு தொடங்கியது.இதையடுத்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொது மக்களுக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.5 கட்டமாக நடைபெற உள்ள நீச்சல் பயிற்சி வகுப்பில் நேற்று தொடங்கிய முதல் கட்ட பயிற்சி வகுப்பில் சுமார் 50 பேருக்கு நீச்சல் பயிற்சி அளிக்கப்பட்டது.இதில் நீச்சல் குள பயிற்சியாளர்கள்,காப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கடலூர் சட்டமன்ற தொகுதி செயல்வீரர்கள் கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், கடலூர் மாநகர செயலாளர் மு. செந்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.