Cuddalore

News April 4, 2024

கடலூர்: இன்றைய வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் வெப்பநிலை கடந்த சில நாட்களாக அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இன்று (04/04/2024) கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோவில் 37 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News April 4, 2024

அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

image

கடலூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சந்திரகாசன் இன்று சிதம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பொழுது உடன் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் முன்னாள் எம்எல்ஏ முருகுமாறன், முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் அதிமுக நிர்வாகிகள் ஒன்றிணைந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். 

News April 4, 2024

கடலூரில் பாமக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கடலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் தங்கர் பச்சான் ராமாபுரம், வழி சோதனை பாளையம், திருமாணிகுழி போன்ற பல்வேறு பகுதியில் பொதுமக்களிடம் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போழது பாமக மாவட்ட செயலாளர் சண் முத்துகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். இதில் இளைஞர்கள் வெடி வெடித்து வரவேற்பு கொடுத்தனர்.

News April 4, 2024

கடலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

மக்களவைத் தேர்தலையொட்டி 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் தபால் வாக்கு அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மக்களவைத் தொகுதியில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 2,189 பேர் தபாலில் வாக்களிக்க விருப்பம் தெரிவித்துள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

News April 4, 2024

கடலூரில் தங்கர்பச்சான் தீவிர தேர்தல் பிரச்சாரம்

image

கடலூரில் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக கூட்டணி கட்சி சார்பில் பா.ம.க. வேட்பாளர் தங்கர் பச்சான் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை கடலூர் அடுத்த வசந்தராயன்பாளையத்தில் மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் அங்கு வந்த பள்ளி மாணவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதில் பாஜக மற்றும் பாமக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

News April 4, 2024

பள்ளி பேருந்தில் பாலியல் தொல்லை: வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

News April 4, 2024

கடலூர்: திருமணம் மீறிய விவகாரம் 

image

கடலூர் திருமாணிக்குழியை சேர்ந்தவர் வேலு இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சிவகாமி என்பவருக்கும் திருமணம் மீறிய உறவு இருந்து வந்தது.இதுபற்றி அறிந்த சிவகாமியின் மாமனார் ராமலிங்கம் இன்று வேலுவை கத்தியால் குத்தியுள்ளார்.இதில் படுகாயம் அடைந்த வேலு, கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.இது குறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து ராமலிங்கத்தை கைது செய்தனர்.

News April 4, 2024

கடலூர்: பாலியல் தொல்லை- வழிகாட்டு நெறிமுறை

image

தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும் எனவும்,ஓட்டுனருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும்.ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portal-ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

News April 4, 2024

கடலூர்: 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

image

கடலூர் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் (ஜனதா-1) ரேஷன் கடையில், 100% ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு முகாம், கடலூர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடந்தது. இதில் பொது விநியோகத் திட்ட துணைப்பதிவாளர், கூட்டுறவு சார்பதிவாளர், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

News April 3, 2024

தேர்தல் மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி கூட்டம்

image

கடலூரில் தேர்தல் மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி கூட்டம் இன்று நடந்தது. இதற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, வாக்குப்பதிவு நாள் அன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். இதில் திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மண்டல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!