India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் மாவட்டத்தில் தேவையான இடங்களில் குற்றங்களை கண்டறிய மிகவும் உறுதுணையாக இருக்கும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என கடலூர் எஸ்பி ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது மாவட்டத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் எத்தனை செயல்பாட்டில் உள்ளன, பழுதடைந்த கேமராக்களை உடனடியாக பழுது நீக்கம் செய்யவும் தேவையான இடங்களில் புதிதாக கேமராக்களை பொருத்தவும் முயற்சி மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் 2023 அங்கன்வாடி மையங்கள் மூலம் குழந்தைகளுக்கு இணையுனவுடன் மதிய உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 1,04,587 குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், 10,223 கர்ப்பிணி பெண்கள் மற்றும் 9,405 பாலூட்டும் தாய்மார்களுக்கு இணையுனவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளுக்கு வருடத்திற்கு வண்ண சீருடைகளும் வழங்கப்படுகின்றன என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
நாட்டிற்காக தங்களது இளம் வயதை இராணுவ பணியில் கழித்து பணிக்காலம் நிறைவு பெற்ற முன்னாள் படைவீரர்களது பாதுகாப்பை உறுதி செய்திட“முதல்வரின் காக்கும் கரங்கள்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கடனுதவி பெற விரும்புபவர்கள் htps://ex-servicemen-welfare.pixous.info என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
பண்ருட்டி, கோ.பூவனூர், விருதை, விஜயமாநகரம், வேப்பூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (ஜன.30) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, வேப்பூர், அடரி, கீழூர், மங்களூர், சேப்பாக்கம், கீழக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் அடுத்த கலையூரை சேர்ந்தவர் சிவப்பிரகாசம் மகள் பிரதிக்ஷா (5). இன்று தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த பதிவெண் இல்லாத டிராக்டர் பிரதிக்ஷா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவளை பாகூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே உயிரிழந்தாள். இது குறித்து தூக்கணாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2025ஆம் ஆண்டு ஜனவரி மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வரும் 31.01.2025 நாளன்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடக்க உள்ளது. இந்த கூட்டத்திற்கு ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமை தாங்கி விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்கள் பெற உள்ளார். அதனால் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 7 லட்சத்து 89 ஆயிரத்து 509 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 62 ஆயிரத்து 994 பேர் உள்நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்றனர். இதன் மூலம் கடந்த ஆண்டில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,632 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என மருத்துவத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடலுார் மாவட்டத்தில, கடந்த ஓராண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் விபத்தில் காயமடைந்த 17,626 பேர் உட்பட 85,939 பேர் பயனடைந்துள்ளனர். இதில் பிரசவம், சாலை விபத்துகள், நெஞ்சுவலி, சுவாச கோளாறு உள்ளிட்ட அவசர மருத்துவ உதவிக்காக பலர் பயனடைந்துள்ளனர். சிறப்பு சேவையாக விஷம் குடித்தல், நாய் மற்றும் பாம்பு கடி ஆகிய அவசரங்களிலும் சேவை வழங்கப்பட்டது. 2023ஆம் ஆண்டைவிட கூடுதலாக 846 பேர் பயன்பெற்றனர்.
குறிஞ்சிப்பாடி அடுத்த சின்ன தானங்குப்பத்தை சேர்ந்தவர் தொழிலாளி வெங்கடேசன் (43). இவர் அதே பகுதியை சேர்ந்த சாரதிக்கு சொந்தமான தேக்கு மரத்தில் ஏறி கிளைகளை அகற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்தார். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் – காட்டுமன்னார்கோயில் சாலையில் ஓட்டுநரின் கவனக்குறைவால்
நெய்வாசல் கிராமம் அருகே
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்துக்குள்ளானதில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.