India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது.இதனை முன்னிட்டு கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக காவல்துறையினர் அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி இன்று கடலூர், மஞ்சக்குப்பம் மைதானத்தில், கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் 225 வாகனங்களில் சுமார் 3,800 போலீசார் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் எளிதில் வாக்களிக்க ஏதுவாக வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட், சேமிப்பு கணக்கு புத்தகம், பணியாளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம் உட்பட 13 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒரு அசல் ஆவணங்களை ஓட்டுச்சாவடிக்கு எடுத்துச் சென்று ஓட்டளிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரில் இருந்து கடலூர், திருச்சி, பழனி வழியாக கோவைக்கு 2 நாள் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. ஏப்ரல் 18 மற்றும் 20 ஆகிய தேதிகளில் எழும்பூரில் இருந்து மாலை 4.25க்கு புறப்படும் ரயில் கடலூர் துறைமுகம் சந்திப்பிற்கு இரவு 8.48 க்கு வந்து மறுநாள் காலை 8.20 க்கு கோவை சென்று சேரும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் உத்ராமல் , சிதம்பரம் காவல் ஆய்வாளர் ஜெமின்லதா , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் சீனுவாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் ஆட்சியர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீட்டில் எல்கேஜி சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பள்ளி கல்வித்துறையின் இணைய தளத்தில் வரும் 22ம் தேதி முதல் மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக தாசில்தார் பலராமன் கலந்து கொண்டனர். தொடர்ந்து குடியிருப்போர் நலச்சங்கங்களின் உறுப்பினர்கள் நாடாளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களிப்போம் என உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

சிதம்பரம் மேலவீதியில் உள்ள அண்ணா காய்கனி மார்க்கெட் ஏப்ரல்-19 தேர்தல் அன்று பொது விடுமுறை என்பதால் முழு நேரமும் இயங்காது, என காய்கனி வியாபாரிகள் நல சங்கம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய் மற்றும் பழங்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக் கொள்ளுமாறும் வியாபாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் கடலூர் அரசு பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப்பெட்டிகள் பாதுகாத்து வைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறைகள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேற்கொள்ளப்பட்டுவரும் முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு
செய்தார்.

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால முதல் கட்ட நீச்சல் பயிற்சி வகுப்புகள் கடந்த 2-ம் தேதி தொடங்கி நேற்று முடிவடைந்தது. இந்நிலையில் 2-ம் கட்ட நீச்சல் வகுப்பு நாளை (16ம் தேதி) துவங்கி 28ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

மக்களவை தேர்தலையொட்டி 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி 18ஆம் தேதி விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் 18 வயதுக்குட்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொள்ளலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் 18-ம் தேதி காலை 5.30 மணிக்குள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.