Cuddalore

News April 18, 2024

கடலூரில் இருந்து 120 சிறப்பு பஸ்கள் இயக்கம்

image

பாராளுமன்ற தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு சிறப்பு பஸ்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு இயக்கப்படுகிறது. அதாவது கடலூரில் இருந்து சென்னைக்கு கூடுதலாக 100 பஸ்களும், பெங்களூருக்கு 5 பஸ், திருச்சி, சேலம் மற்றும் மதுரைக்கு தலா 5 பஸ்களும் இயக்கப்படுகிறது என கடலூர் போக்குவரத்து கழக அதிகாரி இன்று தெரிவித்தார்.

News April 18, 2024

தொழிலக பாதுகாப்பு அதிகாரி முக்கிய அறிவிப்பு

image

கடலூரில் தொழிலாளர்களுக்கு நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஓட்டளிக்க ஏதுவாக நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை உள்ள தொகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று ஓட்டளிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

News April 18, 2024

தொழிலக பாதுகாப்பு அதிகாரி முக்கிய அறிவிப்பு

image

கடலூரில் தொழிலாளர்களுக்கு நாளை நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் ஓட்டளிக்க ஏதுவாக நாளை சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். வெளிமாநில தொழிலாளர்களுக்கு ஓட்டுரிமை உள்ள தொகுதியில் ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று ஓட்டளிக்க வசதியாக சம்பளத்துடன் கூடிய விடுமுறையும் அளிக்க வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.

News April 18, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராம், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் குணபாலன், நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 17, 2024

கடலூரில் ரூ.9.50 கோடிக்கு மதுபாட்டில்கள் விற்பனை

image

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 17, 18, 19-ந்தேதிகளில் டாஸ்மாக் கடைகளை மூட கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டார். இதனால் 3 நாட்கள் கடைகள் திறக்கப்படாது என்பதால், நேற்று கடலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபிரியர்கள் போட்டி போட்டு மதுபானங்களை வாங்கி சென்றனர். இதனால் நேற்று ஒரே நாளில் கடலூர் மாவட்டத்தில் ரூ.9.50 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டது.

News April 17, 2024

கடலூர்: 3-ஆம் கட்ட நீச்சல் பயிற்சி

image

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கோடைக்கால 2-ம் கட்ட நீச்சல் வகுப்புகள் நேற்று துவங்கி வரும் 28ஆம் தேதிவரை நடைபெறுகிறது‌. இந்நிலையில் 3-ஆம் கட்ட நீச்சல் வகுப்பு வரும் 30-ம் தேதி முதல் மே மாதம் 12-ம் தேதிவரை நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு அலுவலர் செ. மகேஷ்குமார் தெரிவித்துள்ளாா்.

News April 17, 2024

கடலூர்: எஸ்.பி. அறிவிப்பு

image

பாராளுமன்ற தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் துணை ராணுவ படையினர் 450, ஆந்திர மாநில காவல்துறையினர் 150, தெலுங்கானா ஊர்காவல் படையினர் 300, தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் 180 மற்றும் கடலூர் ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற காவல் துறையினர், ஓய்வு பெற்ற ராணுவத்தினர் என மொத்தம் 4300 காவல்துறையினர் பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக கடலூர் எஸ்.பி. ராஜாராம் இன்று தெரிவித்தார்.

News April 17, 2024

கடலூர்: காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்

image

கடலூர் மாவட்டத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தலை (2024) முன்னிட்டு, வரும் 19ஆம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் நேரில் சென்று வாக்களிக்கலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியரும், கடலூர் மாவட்ட தேர்தல் அலுவலருமான அருண் தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

கடலூர்: ஆட்சியர் அறிவிப்பு!

image

கடலூர் நாடாளுமன்றத் தொகுதியில் வரும் 19ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் பொதுத்தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு பொதுமக்கள் 18004253168 என்ற டோல் ஃப்ரீ எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

கடலூரில் 4 நாட்களுக்கு விடுமுறை

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் ஏப்ரல் 17ஆம் தேதி காலை 10 முதல் வரும் 19ஆம் தேதி இரவு 12 வரை மூடப்படும். மேலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் நாளான ஜூன் 4ஆம் தேதியும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!