Cuddalore

News April 19, 2024

கடலூர் மாவட்டத்தில் 22 தேதி முதல் விண்ணப்பிக்கலாம்…..

image

கடலூர் ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிறுபான்மைப் தனியார் சுயநிதி மழலையர் தொடக்கப்பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் 25 % இட ஒதுக்கீட்டில் எல்கேஜி சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், பள்ளி கல்வித்துறையின் இணையதளத்தில் வரும் 22ம் தேதி முதல் மே 20 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 19, 2024

கடலூரை பாமக கைப்பற்றும்: தங்கர்பச்சான் 

image

கடலூரில் பாமக வேட்பாளர் தங்கர்பச்சான் கூறுகையில் நான் மற்ற வேட்பாளர்கள் போல உங்கள் பாதம் பணிந்து வேண்டுகிறேன் என்று கூறவில்லை. மாறாக தகுதிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூறினேன். முதல் முறையாக இம்முறை கடலூர் பாராளுமன்ற தொகுதியை பாமக கைப்பற்றும் என்றும், பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று வேட்பாளர் தங்கர்பச்சான் கூறினார்

News April 19, 2024

தேர்தல் பணியில் 7,556 ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள்!

image

தமிழகத்தில் லோக்சபா தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடலூர் லோக்சபா தொகுதியில் இன்று நடைபெற்று வரும் தேர்தல் பணியில் 7,556 ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். மேலும் கடலூர் லோக்சபா தொகுதியில் உள்ள 1509 ஓட்டுச் சாவடி மையங்களில் 119 ஓட்டு சாவடிகள் பதட்டமான ஓட்டுசாவடி, 53 ஓட்டு சாவடிகள் மிக பதற்றமான ஓட்டுச்சாவடி என கண்டறிந்து துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News April 19, 2024

சிதம்பரம் பாஜக வேட்பாளர் வாக்குப்பதிவு

image

இந்திய தேசிய ஜனநாயக கூட்டணி சிதம்பரம் நாடாளுமன்ற பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் கார்த்தியாயினி ஜனநாயக கடமையாற்ற இன்று அவரது தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார். பின்பு வாக்களித்த தனது விரல்களை காண்பித்த அவர், ஜனநாயக கடமையை ஆற்றி விட்டேன் என்று செய்தியாளர்களிடம் மகிழ்ச்சியுடன் கூறினார்.

News April 19, 2024

வேப்பூர் அருகே வாக்குப்பதிவு தாமதம்!

image

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(ஏப்.19) தமிழ்நாடு முழுவதும் காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் பெரியநல்லூர் காலனியில், வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரியநல்லூரில் வாக்குப்பதிவு தாமதமாகியுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டு சரிசெய்யப்பட்டு வருகிறது.

News April 19, 2024

காட்டுமன்னார்கோவிலில் ஓட்டு போட்ட அமைச்சர்

image

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி நடக்கிறது. முன்னதாக 6 மணி முதல் 7 மணி வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது சொந்த ஊரான காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள முட்டம் கிராமத்திற்கு சென்று, அங்குள்ள அரசுப் பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார்.

News April 18, 2024

கடலூர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

image

கடலூர் கிருஷ்ணசாமி பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தொலைத் தொடர்பியல் பிரிவு சார்பில் 2023 – 24 ஆம் ஆண்டிற்கான கணினி தொடர்பியல் துறையில் தொழில்நுட்ப வளர்ச்சிகள் என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்களின் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

News April 18, 2024

கடலூர் தொகுதி வேட்பாளர்கள் பற்றி தெரியுமா?

image

கடலூர் மக்களவைத் தொகுதியில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் யார் என்பதைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தையோ அல்லது இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்து அறப்போர் தொகுதிவாரி காணொளி மூலமாகவோ அறிந்து கொள்ளுங்கள். நாளை அனைவரும் வாக்களிப்போம்! ஜனநாயகத்தை தழைக்கச் செய்வோம்! வாக்களிப்பது நமது உரிமை மட்டுமல்ல, நமது கடமையும் கூட.

News April 18, 2024

கடலூர் மாநகர மேயர் வீட்டில் வருமானவரித்துறை சோதனை

image

நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரிசு பொருட்கள் கொடுக்கப்படுவதாக தகவல் வந்ததை அடுத்து இன்று கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள மாநகர மேயர் சுந்தரி ராஜா வீட்டில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது ஏராளமான திமுக கட்சி தொண்டர்கள் திரண்டு உள்ளனர்

News April 18, 2024

கடலூரில் ஆயுதப்படை காவலர்களுக்கு அறிவுரை

image

நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இந்த நிலையில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியும் ஆயுதப்படை போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அறிவுரை வழங்கினார்.

error: Content is protected !!