India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்ட பொதுமக்களின் பல ஆண்டு கோரிக்கையை ஏற்று கடலூர் – சேலம் பாசஞ்சர் DEMU ரயில் (06121) முதல் முறையாக இன்று அதிகாலை கடலூர் துறைமுகத்திலிருந்து தொடங்கியது. இந்த ரயில் குறிஞ்சிப்பாடி, வடலூர், நெய்வேலி, ஊத்தங்கால் மங்கலம், விருத்தாசலம் வழியாக சேலம் சந்திப்பை சென்றடைகிறது. முன்பு இந்த ரயில் விருத்தாசலம் – சேலம் வரை மட்டுமே இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் நேற்று (மே 2) கடலூரில் 38 டிகிரி செல்சியஸ், சிதம்பரத்தில் 40 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயிலில் 40 டிகிரி செல்சியஸ், நெய்வேலியில் 42 டிகிரி செல்சியஸ், விருத்தாசலத்தில் 42 டிகிரி செல்சியஸ், திட்டக்குடியில் 42 டிகிரி செல்சியஸ் மற்றும் குறிஞ்சிப்பாடியில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் குருமூர்த்தி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் பரணிதரன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலாளர் மற்றும் அரசு கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயந்த் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் அங்கு பராமரிக்கப்படும் கோப்புகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை மே 6-ம் தேதி முதல் முற்றிலும் தவிர்த்திட வேண்டும். மேலும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களில் விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வணிகம் தடை செய்யப்படும் என கடலூர் கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் கடலூர் திமுக கட்சி சார்பில் முதுநகர் பகுதியில் நீர்மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாநகர மேயர் சுந்தரி ராஜா மற்றும் திமுக மாநகர செயலாளர் ராஜா கலந்து கொண்டு பொதுமக்களுக்கு மோர் மற்றும் பழ வகைகளை வழங்கினர் இந்த நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர் விஜயலட்சுமி செந்தில் அனைவரையும் வரவேற்றார்.

கடலூர் மாவட்டம் காராமணிக்குப்பம் அடுத்த நெல்லிக்குப்பத்தில் புனித சூசையப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சூசையப்பர் ஆண்டு பெருவிழா கடந்த 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த நிலையில் நேற்று இரவு ஆலயத்தில் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக இந்த பெருவிழாவில் குழந்தை இயேசு தேர் மற்றும் மாதா தேரை பெண்கள் மட்டுமே தங்களின் தோள்களில் சுமந்து தூக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்ட எஸ்.பி. ராஜாராம் அறிவுறுத்தியதின் பேரில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் மாவட்டம் முழுவதும் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் விற்றுக் கொண்டிருந்த 55 பேரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1034 மதுபாட்டில்கள், 6 லிட்டர் சாராயம், 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நேற்று தொழிலாளர்களுக்கு மே தினத்தன்று ஊதியத்துடன் விடுப்பு அளிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதனை மீறி கடலூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு விடுப்பு அளிக்காத மற்றும் பணியாளர்கள் பணிபுரிய முன்அனுமதி பெறாத 54 நிறுவனங்களுக்கு 1958-ம் ஆண்டு தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அபராதம் விதித்து தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ராமு உத்தரவிட்டுள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (01/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் உதவி ஆய்வாளர் லெனின், விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுமதி மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.