Cuddalore

News May 5, 2024

கடலூர் அருகே மோதல்;இரண்டு பேர் கைது

image

கடலூர் தேவனாம்பட்டினத்தை சேர்ந்தவர்கள் விஜி மற்றும் சுந்தர்,மீனவர்கள். இவர்களுக்குள் மீன் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.நேற்று முன்தினம் விஜி மற்றும் 3 பேர் சாலையில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த சுந்தர்,கபில் உள்ளிட்ட சிலர் விஜியிடம் தகராறு செய்தனர்.இதைடுத்து அவர்கள் தாக்கினர். புகாரின் பேரில் போலீசார் சுந்தர்,கபிலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

News May 5, 2024

கடலூரில் தொடர்ந்து 4வது நாளாக சதம் அடித்த வெயில்

image

கடலூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் கடந்த 4 நாட்களாக மிகவும் அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று (மே 4ம் தேதி) கடலூரில் 101.5 பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து 4வது நாளாக கடலூரில் வெயில் சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.கடும் வெயிலால் கடலூர் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.மேலும் இன்றும் இதே நிலைதான் தொடரும் என் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 5, 2024

கடலூர் அருகே அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா

image

கடலூர், செம்மண்டலம் அரசு ஐ.டி.ஐ அருகில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வமுத்து மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை செடல் பிரமோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் செம்மண்டலம் மற்றும் சுற்றியுள்ள பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

News May 4, 2024

சிதம்பரம் நடராஜர் கோவில் கனக சபையில் 40 பேர் கைது

image

சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று தேவாரம் திருவாசகம் சிவபுராணம் பாடி சங்கு ஊதும் போது கனக சபையில் சலசலப்பு ஏற்பட்டது. நடராஜர் கோவிலில் கனக சபை மீது தமிழ் தேவார பாடசாலை நிறுவனர் சேலம் சத்யபாமா உள்ளிட்ட சிவனடியார்கள் தேவாரம் பாடினர். அப்போது இடையூறு ஏற்படுத்தியதாக தீட்சதர்கள் சார்பில குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து சத்தியபாமா உள்ளிட்ட 40 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

News May 4, 2024

கடலூர் கோவிலில் நாளை பாலாலயம்!

image

கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாளை (மே.5) ஞாயிற்றுக்கிழமை பாலாலயம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாளை காலை 7 மணிக்கு சோம பாலிகா பூஜை, மண்டப பூஜை, யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்று விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 4, 2024

கடலூரில் மஞ்சள் அலர்ட்

image

அரபிக்கடலோரப் பகுதிகளில் அதீத அலை ஏற்படவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூரில் கடல் அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரத்திற்கு எழும் என்பதால் மக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்றும், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும், படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News May 4, 2024

கடலூரில் நீச்சல் பயிற்சி வரும் 12ஆம் தேதி நிறைவு

image

கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கோடைக்கால நீச்சல் வகுப்பு கடந்த 30ஆம் தேதி துவங்கியது. இந்த நீச்சல் வகுப்பு வரும் 12ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நீச்சல் வகுப்பில் மாணவர்கள் ஆர்வமுடன் நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 4, 2024

கடலூரில் நீச்சல் பயிற்சி வரும் 12ஆம் தேதி நிறைவு

image

கடலூர், மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு குறைந்த கட்டணத்தில், சிறந்த பயிற்சியாளர்கள் மூலம் கோடைக்கால நீச்சல் வகுப்பு கடந்த 30ஆம் தேதி துவங்கியது. இந்த நீச்சல் வகுப்பு வரும் 12ஆம் தேதி நிறைவடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெற்று வரும் நீச்சல் வகுப்பில் மாணவர்கள் ஆர்வமுடன் நீச்சல் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

News May 3, 2024

வர்த்தகர்கள் நல சங்க தலைவர் முக்கிய அறிவிப்பு

image

விருத்தாசலம் வர்த்தகர்கள் நல சங்க தலைவர் கோபு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆண்டுதோறும் மே 5-ந் தேதி வணிகர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டு வணிகர் தினம் மதுரையில் வணிகர் விடுதலை முழக்க மாநாடாக நாளை மறுநாள் (5-ம் தேதி) நடக்கிறது. எனவே இதில் அனைத்து பிரிவு நிர்வாகிகள், அனைத்து வர்த்தகர்களும் தங்களது குடும்பத்துடன் திரளாக கலந்து கொள்ள வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 3, 2024

சிதம்பரம் அருகே கார் மோதி தொழிலாளர் பலி

image

சிதம்பரம் அருகே வீரநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன், தொழிலாளி. இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் சிதம்பரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!