India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.08) மதியம் 1 மணி வரை இடியுடன்கூடிய, லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிகத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் கடலூர் மாவட்டத்தில் பாடம் வாரியாக 100% தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரம், மொழிபாடம் -3 பேர்,இயற்பியல்-67,வேதியியல்-52, உயிரியல்-183,தாவரவியல்-10,விலங்கியல்-30,கணினி அறிவியல்-178,புவியியல்-1,உயிர் வேதியியல்-1,கணிதம்-222,வரலாறு-2,பொருளியல்-21வணிகவியல்-84,கணக்கியல்-18 மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில்-35 பேர் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கல்வித் தரக் குறியீடுகளில் தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக கடலூர் மாவட்டம் இருந்தது. ஆனால் புதிய அரசு பொறுப்பேற்று எடுத்த தொடர் முயற்சியின் விளைவாக இன்று கடலூர் மாவட்டம் மிகச்சிறந்த முறையில் கல்வித்தர குறியீடுகளில் முன்னேற்றமடைந்திருக்கிறது என காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

காட்டுமன்னார்கோயில் அடுத்த உடையார்குடியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (25). பூக்கடை வைத்து நடத்தி வந்த இவர், சரிவர கடைக்கு செல்லாததால் பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த கார்த்திகேயன் நேற்று நள்ளிரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தினர் மனு கொடுக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,கடலூர் ஊராட்சி பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக 100 நாள் வேலை கொடுக்கப்படாமல் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர்.இதனால் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு உடனடியாக வேலை வழங்குமாறு மனுவில் கூறியிருந்தனர்.

தமிழக கடல் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக அலையின் சீற்றம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவும், பொதுமக்கள் கடலில் இறங்கி குளிக்கவும் மீன்வளத்துறை சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது.2 நாட்களுக்குப் பிறகு கடல் சீற்றம் குறைந்ததால் நேற்று இரவு எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் கடலூர் துறைமுகத்திலிருந்து நாட்டு படகு மற்றும் பைபர் படகில் மீனவர்கள் இன்று காலை மீன் பிடிக்க சென்றனர்.

கடலூர் புதுக்குப்பத்தை சேர்ந்தவர் தினகரன் (23). இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்தார். ரெட்டிச்சாவடி அருகே வந்தபோது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பு கட்டையில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தினகரன் அங்கேயே உயிரிழந்தார். இதுகுறித்து ரெட்டிச்சாவடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் சத்திய ஞான சபை பெருவெளியில் தொல்லியல் துறையினர் இன்று ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.தொல்லியல்துறை இணை இயக்குநர் தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இதனால் நெய்வேலி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கம்மாபுரம் அடுத்த கோட்டேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகத்தின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர் கணித பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கம்மாபுரம் அடுத்த கோட்டேரியைச் சேர்ந்தவர் ஆறுமுகத்தின் மகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்நிலையில் நேற்று வெளியான தேர்வு முடிவில் அவர் கணித பாடத்தில் தோல்வி அடைந்தார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.