India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பண்ருட்டியில் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இளைஞர் உயிரிழந்தார்.கலையரசன் உடலை மீட்ட போலீசார், கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நிலத்தின் உரிமையாளர்களான ஆறுமுகம் (37) மற்றும் குப்பனை (45) கைது செய்தனர். விசாரணையில் கரும்பு தோட்டத்தைக் காட்டுப் பன்றிகள் நாசம் செய்து விடுவதாகவும், அதனைத் தடுக்க மின்கம்பிகள் அமைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

கடலூர் மத்திய சிறைச்சாலையில் ஆயிரத்துக்கும் அதிகமான விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு 8 ஆயுள் தண்டனை கைதிகள் பதினொன்றாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினர். இதில் தேர்வு எழுதிய 8 கைதிகளும் தேர்ச்சி பெற்று உள்ளனர். தேர்ச்சி பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சிறை அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 16,908 மாணவர்கள், 15,661 மாணவிகள் என மொத்தம் 32,569 பேர் தேர்வு எழுதினர். அதில் 15,230 மாணவர்கள், 14 ஆயிரத்து 939 மாணவிகள் என மொத்தம் 30,169 பேர் தேர்ச்சி பெற்றனர். இந்த நிலையில் கடலூர், திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தலைமை ஆசிரியை வழங்கினார்.

மாநில அளவிலான கபடி போட்டி, செங்கல்பட்டு மாவட்டம், கோவிலாச்சேரியில் நடைபெற்றது. இந்த போட்டியில் மாநில அளவில் பல்வேறு அணிகள் பங்கேற்றன. அதில் கலந்து கொண்ட கடலூர் அடுத்த உண்ணாமலை செட்டி சாவடியைச் சேர்ந்த ராஜா பிரதர்ஸ் கபடி அணி முதலிடம் பிடித்து ரூ.30,000 பரிசு தொகை வென்றது. இதையடுத்து ராஜா பிரதர்ஸ் கபடி அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் முட்டை விலை திடீரென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை 5 ரூபாய் 60 காசுக்கு விற்கப்பட்ட ஒரு முட்டை இன்று 6 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தினமும் பயன்படுத்தக்கூடிய முட்டை விலை திடீரென உயர்ந்து உள்ளதால் கடலூர் பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை கடலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்கும் எண்ணும் மையமான தேவனாம்பட்டினம் அரசு கல்லூரியில் நேற்று கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், அடுத்த மாதம் (ஜூன்) 4-ம் தேதி வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட 336 அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு விரையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் கடலூர் மாவட்டம் 20 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 86.83% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.86 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 90.98 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன.அதன்படி கடலூர் மாவட்டத்தில் மாணவர்கள் 87.99% பேரும், மாணவியர் 93.97% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 91.01 % தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

கடலூர் மாவட்ட தடகள கழக மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்ட தடகள வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கோடைகால சிறப்பு பயிற்சி முகாம், கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நாளை 15 ஆம் தேதி முதல் நடக்கிறது. சிறந்த பயிற்றுநர்கள் மற்றும் மூத்த தடகள வீரர்கள் மூலம் விளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.