India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், இன்று (20.5.24) அடுத்த 3 மணி நேரத்தில் அதவாது 10 மணி வரை கடலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும், இப்பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடலூர் முதுநகர் ஏ.பி.டி மாருதி கிளையில் ‘தி எபிக் நியூ ஸ்விப்ட்’ புதிய கார் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டாக்டர் பிரவீன் ஐயப்பன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய காரை அறிமுகம் செய்து வைத்தார். உடன் கிளை மேலாளர், கடலூர் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (19/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன், சிதம்பரம் சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயதேவி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவகாமி, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ஜவ்வாதுஉசைன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூரில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் தினசரி இரவு போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணி மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கடலூர் அண்ணா பாலம் அருகிலும், ஆல்பேட்டை சோதனை சாவடியிலும் போலீசார் இன்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குடியிருப்பு பகுதியிலும் இருசக்கர வாகனங்களில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

திட்டக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பெண்ணாடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை வானம் மேக மூட்டமாக இருந்தது. இந்த நிலையில் மாலை 4 மணி அளவில் இடி மின்னலுடன் பலத்த மழை வெளுத்து வாங்கியது. சுமார் 30 நிமிடம் பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. இதில் குடியிருப்பு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அடுத்த வடக்கனூர் சேர்ந்தவர் மொட்டையன் மனைவி சிவமாலை (69). இவர் நேற்று திட்டக்குடி அருகே தொழுதூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோ கவிழ்ந்ததில் படுகாயம் அடைந்த சிவமாலை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள தெற்கு இலங்கை கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக கடலூர் ஆகிய 8 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புயுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடலூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ஒரு சில இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. இந்த நிலையில் நேற்று கடலூரில் வெயிலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து காணப்பட்டது. இதனால் கடலூரில் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வரும் நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் கடலூர் மாவட்டத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி, இன்று காலை 10 மணி வரை கடலூர் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (18/05/24) இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராதிகா , சிதம்பரம் காவல் ஆய்வாளர் விநாயகம், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் அய்யனார், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் எழில்தாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.