India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திட்டக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கூடுதல் மருத்துவமனை கட்டிடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (செப்.11) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கட்டுமான பணிகளை விரைந்து, தரமாக செய்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் விவசாயிகள் நேரடி கொள்முதல் நிலையங்களில் எளிதில் பதிவு செய்து நெல் விற்பனை செய்ய e-DPC இணையத்தில் 1.9.2024 முதல் விளை நிலத்தின் பட்டா நகல், சிட்டா அடங்கல், ஆதார் வங்கி புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்ய வேண்டும். இதற்காக விவசாயிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே பி.முட்லூர் ஆனையாங்குப்பம் விழுப்புரம் – நாகை தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் விபத்து. லாரியும், காரும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரும் உடல்நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் உடல்களை மீட்டு, இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் எஸ்.ஐ. கதிரவன் மற்றும் போலீசார் இன்று கடலூர் பஸ் நிலையம் அருகில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கே லாட்டரி சீட்டுகளை பதுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்த வசந்தராயன் பாளையத்தை சேர்ந்த வைத்தியநாதன் மகன் மணிகண்டன் (39) என்பவரை போலீசார் கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (11/09/2024) கடலூர் உதவி ஆய்வாளர் கவியரசன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாசலம் உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜதாமரை பாண்டியன், சேத்தியாத்தோப்பு உதவி ஆய்வாளர் கோபிகுமார் ஆகியோர் ரோந்துப்பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்திற்குட்பட்ட டி.இளமங்கலம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் இன்று (11.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் குறித்து கேட்டறிந்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்வியில் சேர இயலாத மாணவர்கள், கடலூர் புதுப்பாளையம் புனித அன்னாள் பள்ளியில் நாளை நடைபெற உள்ள ‘உயர்வுக்கு படி’ நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்வில் மாணவர்களுக்கு உயர் கல்வியின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், பிற வசதிகளும் மேற்கொண்டு தரப்படும்.
கடலூர் அருகே வரக்கால்பட்டு பகுதி விளைநிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பயிர்களுக்கு தேவையான உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கிறதா? என விவசாயிகளிடம் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு வரும் செப்.15 முதல் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் இல்லம் தோறும் திமுக உறுப்பினர் சேர்க்கை துவங்குதல் மற்றும் செப்.17 பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் சிலை மற்றும் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டல அலுவலகத்திலுள்ள வட்ட செயல்முறை கிடங்கிலிருந்து நியாயவிலைக் கடைகளுக்கு நகர்வு செய்யப்படும் விதம் மற்றும் உணவுப் பொருட்களின் தரம் குறித்தும் மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அவர்கள் நேற்று (10.09.2024) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.