India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சிதம்பரம் அருகே உள்ள வத்திராயன்கொத்து கிராமத்தை சேர்ந்தவர் சம்மதம். இவர் நேற்று தனது இருசக்கர வாகனத்தில் மஞ்சகொள்ளை கிராமம் வழியாக சென்று கொண்டிருந்தார். சாலை குண்டும் குழியுமாக இருந்ததால் நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தார். படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.21) மதியம் 1 மணி வரை இடி மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளது. கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

கடலூரில் நேற்று சில இடங்களில் பரவலாக கனமழை பெய்தது. இதனால் கடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்று குறைந்திருந்தது. மேலும் கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் நேற்று மிதமாக இருந்தது. இந்த நிலையில் கடலூரில் நேற்று 32 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

கடலூர், திருப்பாதிரிப்புலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இன்று சீதோஷ்ண நிலை குறைந்தும் மற்றும் அதிகமாகவும் கலந்து காணப்பட்டது. இதனால் கடலூர் பொதுமக்கள் உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீரை அதிக அளவில் வாங்கி பருகி வருகின்றனர். இந்த நிலையில் கடலூரில் ஒரு இளநீர் 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் உதவி ஆய்வாளர் உத்திரமாள் , சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் ரவிக்குமார், நெய்வேலி காவல் ஆய்வாளர் பிருந்தா மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாசலம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கோட்டுமுளை கிராமத்தை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் (15).சிறுமி.இவரது தாய்மாமனான (21) வாலிபர் ஆசை வார்த்தை கூறி வன்கொடுமை செய்ததில் மாணவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து மாணவி அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் மகளிர் காவல் நிலையம் போலீசார் மாணவியின் தாய்மாமன் மீது நேற்று போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து போலீசார் விசாரிகின்றனர்.

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள பெரியார் அரசு கலைக்கல்லூரியில் 2024-2025-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் கடந்த 8-ந் தேதி முதல் இன்று வரை நடந்தது. இதில் விண்ணப்பிக்க கடைசி நாளான இன்று வரை இளங்கலை படிக்க 1500-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு வருகிற மே 28-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை கல்லூரியில் நடக்கிறது.

கடலூரில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் அளித்த ஒரு பேட்டியில், நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது, தேர்தலின் போதும் ஊர்க்காவல் படையினர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். எப்போதும் சீருடை அணிந்து பணி மேற்கொள்ளும்போது பொறுப்பை ஏற்றுக்கொண்டு திறமையாக பணியாற்றினால் தான்பொதுமக்களிடம் நன்மதிப்பை பெறமுடியும்.அதனால் திறமையுடன் பணியாற்றுங்கள் என்றார்.

கடலூர் வெள்ளப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சுசிலா தேவநாதன் அதே பகுதியில் 10 ஏக்கர் நிலத்தில் வாழை மற்றும் கரும்பு நடவு செய்து வந்துள்ளனர்.இந்த நிலம் தொடர்பாக சில பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று இரவு மர்ம நபர்கள் பயிரிடப்பட்டிருந்த நிலத்தை டிராக்டர் மூலம் உழதனர்.இதனை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் பொதுமக்கள் நெல்லிக்குப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் திருவந்திபுரத்தில் புகழ்பெற்ற தேவநாதசாமி கோவில்108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற இந்த தேவநாதசாமி கோவிலில் திருமணம் செய்து கொள்ள வேண்டிக் கொள்பவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கோவிலுக்குவந்து திருமணம் செய்து கொள்வர்.இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் கோவில் திருமண மண்டபத்தில் 70 பேர், தனியார் திருமண மண்டபத்தில் 30 பேர் என மொத்தம் 100 திருமணங்கள் நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.