Cuddalore

News May 22, 2024

கடலூர் ஒழுங்குமுறை கூடத்தில் ‘ராகி’ மட்டும் வரத்து

image

கடலூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (22/05/2024) கடலூர், முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ராகி வரத்து 1.99 மூட்டை மட்டும் வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடுபொருட்களும் கடலூர் ஒழுங்குமுறை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.

News May 22, 2024

கடலூர் – வேளாங்கண்ணி ரயில் நேரம் மாற்றம்

image

கடலூர் வழியாக வாரம் இரு முறை இயக்கப்படும் வேளாங்கண்ணி – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 24ஆம் தேதி முதல், வேளாங்கண்ணியில் இருந்து சனி மற்றும் திங்கட்கிழமை மாலை 7.10 மணிக்கு புறப்படும் ரயில், கடலூர் முதுநகருக்கு 10.55 மணிக்கும், திருப்பாதிரிப்புலியூருக்கு 11.04 மணிக்கும் வந்து சேரும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News May 22, 2024

கடலூரில் சிறுவன் ஓட்டிய ஆம்புலன்ஸ் விபத்து 

image

கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று காலை தனியார் ஆம்புலன்சில் வந்த நோயாளியை இறக்கிவிட்டதும் , அதன் உதவியாளர் 17 வயது சிறுவன் டிரைவர் உதவி இன்றி ஆம்புலன்ஸை இயக்கி உள்ளார். அப்போது மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் கடலூர் முதுநகரை சேர்ந்த குமார் மனைவி உஷா (55), நெய்வேலியை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி கமலா (26) ஆகியோர் படுகாயமடைந்தனர். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 22, 2024

கடலூர் : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

கடலூர் மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கடலூரில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

கடலூரில் ‘பெல்லாரி வெங்காயம்’ திடீர் விலை உயர்வு

image

கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காய்கறி கடைகளில் காய்கறிகளின் விலை இன்று உயர்ந்து காணப்படுகிறது. 1 கிலோ பல்லாரி வெங்காயம் 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ஒரு கிலோ 35 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அத்தியாவசிய தேவையான வெங்காயம் விலை உயர்வால் கடலூர் மக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

News May 22, 2024

கடலூரில் பயிற்சி

image

கடலூரில் செயல்பட்டு வரும் அனைத்து இந்தியன் வங்கி சார்பாக வரும் மே 31ஆம் தேதி கடலூர் திருப்பாதிரிபுலியூரில் வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பதற்கான இலவச பயிற்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலவச பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என இந்தியன் வங்கி சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்பிரா,ணி கற்பூரம் உள்ளிட்ட பொருள்கள் செய்வதற்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

News May 22, 2024

கடலூர் அருகே இருவேறு விபத்துகள்; இருவர் மரணம் 

image

விருதை அடுத்த கோபாலபுரம் சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி யசோதை (75).நேற்றிரவு சாலையை கடக்க முயன்றபோது அவ்வழியே வந்த பைக் மோதியது. விருதை அடுத்த பெரம்பலூர் கிராமத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (52).இவர் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்றபோது அவ்வழியே வந்த போர்டு கார் மோதியது. இருவரையும் விருதை அரசு மருத்துவமனையில் சேர்த்தும், பலனின்றி இறந்தனர். கம்மாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News May 21, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ரேவதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் வீரசேகரன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 21, 2024

கடலூர்: மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

image

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வானிலை மாற்றம் காரணமாக கடலோர பகுதிகளில் காற்றின் வேகம் 45 முதல் 55 கி.மீ. வேகத்தில் இருக்கும். இதனால் கடல் அலை வழக்கத்தை விட அதிக சீற்றத்துடன் காணப்படும். எனவே கடலூர் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் வருகின்ற 23-ந் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீன்வளத்துறை அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 21, 2024

கடலூரில் திட்டப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

image

கடலூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் தலைமையில் ஊரக வளர்ச்சித் துறையில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலாளர்களுடன் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!