Cuddalore

News May 25, 2024

கடலூர் அருகே என்சிசி பயிற்சி முகாம்

image

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் தமிழ்நாடு நான்காவது கூட்டு தொழில்நுட்ப கம்பெனி என்சிசி சார்பில் நேற்று வருடாந்திர கூட்டு பயிற்சி மற்றும் தல்சாணிக் தேர்வு முகாம் ஆகியவை தொடங்கியது. ஜூன் 1 தேதி வரை நடைபெறும் இம் முகாமின் கட்டுப்பாட்டு அதிகாரியாக தமிழ்நாடு நான்காவது கூட்டு தொழில் நுட்ப கம்பெனியின் கட்டுப்பாட்டு அதிகாரி கர்னல். வாசுதேவ நாராயணன் சேனா மெடல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார்

News May 24, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (24/05/24) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கல்பனா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் முருகேசன், நெய்வேலி காவல் ஆய்வாளர் அசோகன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 24, 2024

கடலூர் எஸ்.பி.ராஜாராம் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் சாராயம், கஞ்சா, மது விற்பனை குறித்தும், கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் , போலி மதுபானம் விற்பனை செய்வோர், மற்றும் கஞ்சா விற்பனை செய்பவர்கள் பற்றிய தகவல்களை காவல்துறைக்கு 7418846100 மற்றும் 04142 -284353 என்ற காவல் உதவி எண்களில் தகவல் தெரிவிக்கலாம். இந்த புகார் எண்ணுக்கு வரும் புகார்களின் அடிப்படையில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எஸ்.பி. ராஜாராம் தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

கடலூரில் சொற்பொழிவு 

image

வடலூர் சன்மார்க்க சத்திய தருமசாலையின் 158வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கடலூர் கடற்கரை சாலையில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் சார்பில் இன்று காலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்று யோகாசன பயிற்சி மற்றும் இயற்கை உணவு குறித்து சிறப்பு நடைபெற்றது.இந்த சொற்பொழிவு ஓய்வு பெற்ற பெரியார் அரசு கல்லூரி பேராசிரியர் அர்த்தநாரி நடத்தினார் பின்பு அங்கிருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

News May 24, 2024

கடலூர்: 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் 9 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

கடலூர் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

கடலூரில் கோடை மழை பெய்து வருகிறது. அதனால் மின் விபத்து ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் மின்சார உபகரண பெட்டிகளை தொட கூடாது. மின்கம்பத்தில் ஆடு, மாடுகளை கட்டக்கூடாது. மின்கம்பிகள் அறுந்து விழுந்தாலோ , சேதமடைந்த மின்கம்பம் மற்றும் தாழ்வாக செல்லும் மின்கம்பி, சேதமடைந்த ஸ்டே கம்பிகள் இருந்தாலும் 9498794987 என்ற அரசின் கட்டணமில்லா சேவை எண்ணில் தெரிவிக்கலாம் என கடலூர் மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

News May 24, 2024

கடலூர்: நள்ளிரவில் எஸ்.பி. அதிரடி சோதனை

image

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திற்கு நள்ளிரவு 12 மணி அளவில் எஸ்.பி. ராஜாராம் திடீரென வந்து பேருந்து நிலையம் முழுவதும் சோதனை மேற்கொண்டார்.அப்போது பேருந்து நிலையத்தில் தேவையின்றி சுற்றித்திரிந்த இளைஞர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.எஸ்.பி.யுடன் வந்திருந்த அதிரடிப்படை போலீசார் பஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர சோதனை நடத்தினர்.பேருந்து நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.

News May 23, 2024

ஆசிரியர் பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கை

image

குறிஞ்சிப்பாடி தாலுகா வடலூரில் உள்ள ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2024-2025 ஆம் கல்வி ஆண்டுக்கான தொடக்கக்கல்வி ஆசிரியர் பட்டய படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு மே 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். பட்டய படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் https//scert.tnschool.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் பழனி தெரிவித்துள்ளார்.

News May 23, 2024

விருத்தாசலம் பகுதியில் பலத்த மழை

image

விருத்தாசலம் பாலக்கரை, ஆலடி, மங்கலம்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று(மே 22) காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 7 மணி முதல் 2 மணி நேரம் இடைவிடாமல் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம்போல் தேங்கியது. இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

News May 22, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் இராஜாராமன் , சிதம்பரம் காவல் ஆய்வாளர் லெட்சுமி, விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் சிவராமன், நெய்வேலி காவல் ஆய்வாளர் ராஜராஜன் மற்றும் பண்ருட்டியில் உதவி ஆய்வாளர் வேல்முருகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!