India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட தடகளத் கழகத்தின் சார்பில் கோடைகால பயிற்சி முகாம் கடந்த 15 நாட்களாக நடந்து முடிந்தது. இந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர் இவர்கள் அனைவருக்கும் பயிற்சிக்கான சான்றிதழ் இன்று வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இந்திய ஹேண்ட்பால் மகளிர் அணியின் பயிற்றுநர் கார்த்திகேயன் கலந்து கொண்டார்.

கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அருங்காட்சியகம் செயல்பட்டு வருகிறது.அருங்காட்சியகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட பழமையான கருங்கல் சிலைகள் வைப்பதற்கு முறையான இடம் இல்லாமல் ஆங்காங்கே கிடந்தன. இதனையடுத்து அருங்காட்சியகத்தை
ரூபாய் 49 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனை இன்று கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தால் சி குரூப் 1 தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு வசதியாக இலவச பயிற்சி வகுப்புகள் கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள், கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரில் நடைபெற உள்ள ராணுவத்தின் அக்னி வீர வாயு இசைக்கலைஞர் தேர்வில் கடலூர் மாவட்ட இளைஞர்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 3ம் தேதி துவங்கி 12ஆம் தேதி வரை ஆட்சேர்ப்பு நடக்கிறது. இதில் கலந்துகொள்ள விரும்புவர்கள் ஜூன் 5ம் தேதிக்குள் https://agnipathvayu.cdac.in என்று இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 39 டிகிரி செல்சியஸ், புவனகிரி 39 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 39 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 40 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 40 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 41 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது

கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் முகாம்களில் 10, 11 மற்றும்
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடலூர் மாவட்ட அரசு மாதிரிப் பள்ளியில் நடைபெற்ற உயர்க்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண் தம்புராஜ் உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை இன்று வழங்கினார்.

இந்திய மருத்துவ சங்கம் மற்றும் கடலூர் சிறகுகள் குழு இணைந்து நடத்தும் மாபெரும் ரத்ததான முகாம், வரும் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை, கடலூர் அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் நடைபெறுகிறது. இந்த ரத்ததான முகாமில் தன்னார்வலர்கள் மற்றும் சமூக சேவகர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு ரத்ததானம் வழங்குமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று (29/05/2024) எள் வரத்து 2.20 மூட்டை, நெல் (சின்னப் பொன்னி) வரத்து 14.50 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.

கடலூர், வேப்பூர், சிறுபாக்கம் அருகே இன்று இரும்பு கம்பிகள் லோடு ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி சென்ற லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்தில் மோதியதால் மின்கம்பிகள் அறுந்து லாரி மீது விழுந்ததில் தீப்பொறி பட்டு தீ பிடித்தது. லாரி முழுவதும் தீ பரவியது.இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் வந்து தீயை அனைத்தனர். இச்சம்பவம் குறித்து போலிசார் விசாரிக்கின்றனர்.

கடலூரில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான பூ வராஹ சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் விஷ்ணுவின் அவதாரமான வராஹா (பன்றி) ரூபத்தை முதன்மையாக கொண்டு இருக்கும் கோயிலாகும். விஜயநகரப் பேரரசின் ஆட்சியாளரான தஞ்சாவூர் நாயக்க மன்னர் அச்சுதப்ப நாயக்கரால் இக்கோயில் கட்டப்பட்டது. ஏழு நிலை ராஜகோபுரம் உடைய இக்கோயிலைச் சுற்றிலும் ஒரு கருங்கல் சுவர், அனைத்து சன்னதிகளையும் கோயில் குளங்களையும் சூழ்ந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.