Cuddalore

News May 31, 2024

வாக்கு என்னும் பயிற்சி வகுப்புகள் இன்று நடந்தது  

image

கடலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6
சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் பணிபுரிய விருக்கின்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணும் உதவியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுடன் தபால் வாக்கு எண்ணிக்கை மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்கு எண்ணிக்கை எண்ணுவது தொடர்பான பயிற்சி மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்
தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.

News May 31, 2024

விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம்.. கலெக்டர்

image

விளையாட்டுத்துறைக்கான 2024-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் தொடர்பான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் https://.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் உள்ளது.விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் தங்களது விண்ணப்பங்களை மேற்படி இணையதளத்தில் உரிய விபரங்களுடன் பதிவேற்றம் செய்து,அதன் நகலை,30.6.2024 அன்றைக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என கலெக்டர் அருண் இன்று தெரிவித்தார்.

News May 31, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி வகுப்பு

image

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு என்னும் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடைபெற்றது. அதாவது வருகிற 4ம் தேதி கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான ஆறு சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு என்னும் பணி நடைபெற உள்ள நிலையில் அதில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் வாக்கு என்னும்போது செய்ய வேண்டியவை குறித்து கலெக்டர் ஆலோசனைகள் வழங்கினார்.

News May 31, 2024

கடலூர் அமைச்சர் எம்ஆர்கே அறிக்கை வெளியீடு

image

ஜுன் 4 அன்று நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கும் கூட்டம் ஜுன் 1 காணொலி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது. இதில் திமுகவினர் கலந்து கொள்ளுமாறு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

News May 31, 2024

திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து பொதுக்கூட்டம்

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரகப் புத்தாக்க திட்ட செயல்பாடுகள் மற்றும் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் தலைமையில் கடலூர் மாவட்ட அளவிலான செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

News May 31, 2024

கடலூர் கலெக்டர் நேரில் ஆய்வு 

image

கடலூர் அரசு அருங்காட்சியகத்தில் பல ஆண்டு காலமாக பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள கற்களால் ஆன சிலைகள் மற்றும் கட்டடப் பராமரிப்பு பணிகளின் நிலை குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். அ. அருண் தம்புராஜ் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அரசு அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர். 

News May 31, 2024

பலாப்பழம் விற்பனை அமோகம்

image

பண்ருட்டி மார்க்கெட் பகுதிகளில் பலாப்பழம் அதிகளவில் குவிக்கப்பட்டு விற்பனை சூடு பிடித்துள்ளது. பண்ருட்டி சுற்றுப்பகுதிகளில் இருந்து வியாபாரிகள் பெருமளவிலான பலாப்பழங்களை கொண்டு வந்து வியாபாரம் செய்கின்றனர். ஒரு பழத்தின் விலை 300 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதை ஏராளமான வியாபாரிகள் மொத்த விலைக்கு வாங்கி செல்கின்றனர்.

News May 30, 2024

கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் ராதிகா, சிதம்பரம் உதவி ஆய்வாளர் மகேஷ், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் இராஜராஜன், நெய்வேலி உதவி ஆய்வாளர் சிவகுருநாதன் மற்றும் பண்ருட்டியில் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 30, 2024

கடலூரில் இன்று வரத்து மிகவும் குறைவு

image

கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தினந்தோறும் மார்க்கெட் நிலவரம் அறிவிப்பு மாறுபட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று எள் வரத்து 0.67 மூட்டை, நெல் (சின்ன பொன்னி) வரத்து 1.00 மூட்டை மற்றும் மக்காச்சோளம் வரத்து 3.42 மூட்டை வந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் வேறு எந்த இடு பொருட்களும் கடலூர் முதுநகர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு இன்று விற்பனைக்கு வரவில்லை.

News May 30, 2024

கடலூரில் 10 மணி வரை மழை

image

கடலூர் மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!