Cuddalore

News March 27, 2024

கடலூர்: வேட்பாளரை சந்தித்து வாழ்த்து தெரிவிப்பு

image

திராவிட முன்னேற்ற கழக கடலூர், திருப்பாதிரிப்புலியூர் தகவல் தொழில்நுட்ப அணி பகுதி ஒருங்கிணைப்பாளர் அ. விக்னேஷ் இன்று கடலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் எம்.கே. விஷ்ணு பிரசாத்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் காங்கிரஸ் மற்றும் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.

News March 27, 2024

கடலூர் மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (27/03/2024) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் சுஜாதா, விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் சந்திரசேகர், நெய்வேலி காவல் ஆய்வாளர் சந்திரன் மற்றும் திட்டக்குடியில் உதவி ஆய்வாளர் சுபிக்ஷா ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 27, 2024

கடலூரில் பாமக பொறுப்பாளர்கள் கூட்டம்

image

கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில், நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பாமக பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சண் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

News March 27, 2024

கடலூர் அருகே கணவர் தூக்கிட்டு தற்கொலை

image

பண்ருட்டி அருகே உள்ள புலவன்குப்பம் ராஜாபாளையம் மெயின் ரோட்டில் வசித்து வந்த வேலு மனைவி சுகுணா தம்பதியினர் ஆவர்.  இருவருக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த வேலு தனக்கு சொந்தமான வயலில் உள்ள ஒரு மரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பண்ருட்டி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 27, 2024

கடலூரில் தேமுதிக வேட்பாளர் இன்று முதல் பிரச்சாரம் 

image

கடலூர் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டு வேட்பு மனு தாக்கல் செய்தார். இன்று சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தெருவில் இருந்து அவர் பிரச்சாரத்தை துவக்கினார். இதில் அதிமுக மாவட்ட செயலாளர் மாஜி அமைச்சருமான எம்.சி சம்பத் மாவட்ட அவைத் தலைவர் சேவல் குமார் மற்றும் ஏராளமான அதிமுக மற்றும் தேமுதிக கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News March 27, 2024

கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

image

கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலை கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை மன்றம் தொடக்க விழா மற்றும் தெற்காசியாவில் இமயமலை நதிநீர் மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக பேராசிரியர் புருஷோத்தமன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

News March 27, 2024

கடலூர்: தடகள விளையாட்டுப் போட்டிகள் துவக்கம்

image

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் உடற்கல்வித்துறை சார்பில் இன்று தடகள விளையாட்டுப் போட்டிகளை பல்கலைக்கழக பதிவாளர் சிங்காரவேலு விளையாட்டு மைதானத்தில் துவக்கி வைத்தார். உடற்கல்வி தலைவர் ராஜசேகரன் தலைமை உரையாற்றினார் பல்கலைக்கழக அனைத்து துறை சார்ந்த மாணவ மாணவிகள் ஒலிம்பிக் சுடரை ஏந்தி தொடர் ஓட்டத்தில் கலந்து கொண்டனர். நாளை போட்டியில் வென்றவருக்கு துணைவேந்தர் தலைமையில் பரிசு வழங்கப்படும்.

News March 27, 2024

தேர்தல்: திருமாவளவன் வேட்புமனு தாக்கல்

image

சிதம்பரம் (தனி) மக்களவைத் தொகுதியில் இண்டி கூட்டணி சார்பில் போட்டியிடும் விசிக வேட்பாளர் தொல்.திருமாவளவன் இன்று (மார்ச் 27) தனது வேட்புமனுவை தலைமைத் தேர்தல் அலுவலரிடம் தாக்கல் செய்தார். அப்போது அவருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர். மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் இன்றுடன் (மார்ச் 27) நிறைவடைகிறது.

News March 27, 2024

சிறை காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட்!

image

கடலூர் மத்திய சிறையில் தண்டனை கைதியாக இருந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, போலீஸ் காவலை மீறி நேற்று முன்தினம் தப்பி ஓடினார். இது தொடர்பாக பாதுகாப்பில் அஜாக்கிரதையாக இருந்த சிறை காவலர்கள் கதிர்வேல், பிரபாகரன், கோவர்தன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

News March 27, 2024

‘பீதி’யில் கடலூர் துறைமுகம் பகுதி மக்கள்!

image

கடலூர் துறைமுகம் பகுதியில் தெருநாய்கள் அதிகமாக உள்ளது. அது மட்டுமல்லாமல் அந்த நாய்களுக்கு கழுத்து பகுதியில் காயம்போல் (நோய்) ஏற்பட்டு, தான் என்ன செய்கிறோம் என்று அறியாமல் திறந்த வீடு, கோவில், பள்ளிவாசல் மற்றும் குழந்தைகள் பள்ளி என அனைத்து இடங்களிலும் அந்த நாய்கள் சென்று நுழைந்து விடுகிறது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளதால் அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!