India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் விசிக, திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத், கடலூர் மாநகராட்சி துணை மேயர் மற்றும் விசிக கடலூர் நாடாளுமன்ற தொகுதியின் மேலிட பொறுப்பாளர் தாமரைச்செல்வனை அவரது இல்லத்தில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதையடுத்து தாமரைச்செல்வன், வேட்பாளர் விஷ்ணு பிரசாரத்திற்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடலூர் தொகுதியில் கடந்த 27ஆம் தேதியுடன் முடிந்த வேட்புமனு தாக்கலில் 30 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் 11 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இதில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 3, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் 5, சுயேட்சைகள் 11 பேர் என தேர்தல் களத்தில் 19 வேட்பாளர்கள் உள்ளனர் என கடலூர் ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
கடலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும், தாங்கள் வேட்பு மனுதாக்கல் செய்த நாளிலிருந்து, வாக்குப்பதிவு நாள் வரையிலான தேர்தல் செலவின கணக்குகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியீட்டுள்ள உள்ள அறிவுரைகளின்படி, குறைந்தபட்சம் மூன்று முறை தேர்தல் செலவின பார்வையாளர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் ஆய்வுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் டாக்டர். எம்.கே. விஷ்ணுபிரசாத்திற்கு ஆதரவாக, தமிழக முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான மு.க ஸ்டாலின் மு.க. ஸ்டாலின் கடலூரில் 05/04/2024 (வெள்ளிக்கிழமை) பிரச்சாரம் செய்ய உள்ளார்.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்தவர்களில் யாரும் வேட்புமனுவை திரும்பப் பெறவில்லை. தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரால் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 14 வேட்பாளர்கள் கொண்ட இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னங்களுடன் வெளியிடப்பட்டது. இதனால் சிதம்பரம் தொகுதியில் 14 வேட்பாளர்கள் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது.
கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இரவு கடலூர் காவல் ஆய்வாளர் முத்துக்குமரன், சிதம்பரம் காவல் ஆய்வாளர் இளவழகி , விருத்தாச்சலம் காவல் ஆய்வாளர் கீதா, நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் திட்டக்குடியில் காவல் ஆய்வாளர் அருள் வடிவழகன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் சீரடி ஸ்ரீ சர்வசக்தி சாய்பாபா ஆலயத்தில் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, மதியம் 3 மணியளவில் சத்திய நாராயண பூஜை மற்றும் குத்துவிளக்கு பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜைகளில் கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு கோவில் நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூர் பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள் இன்று காய்கறிகள் மூலம் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை கலெக்டர் அருண்தம்புராஜ், கோட்டாட்சியர் அபிநயா, மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி ஆகியோர் பார்வையிட்டனர்.
கடலூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையமான தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் இன்று மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டார். அப்போது வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வின் போது தேர்தல் பொது பார்வையாளர் டாரப் இம்சென் , மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
திமுக கூட்டணியில் இரண்டு தொகுதிகளான சிதம்பரம், விழுப்புரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது. சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் திருமாவளவன் போட்டியிடுகிறார். விழுப்புரத்தில் ரவிக்குமார் போட்டியிடுகிறார். அவர்களுக்கு தேர்தல் அலுவலர் ஆனி மேரி ஸ்வர்ணா பானை சின்னம் இன்று ஒதுக்கீடு செய்தார்.
Sorry, no posts matched your criteria.