India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் முதுநகரில் உள்ள ஒரு ஓட்டலில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்மத் கான் (20) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று கடலூர்-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். முதுநகர் கல்யாண மண்டபம் அருகே சென்றபோது அங்கு நின்றிருந்த டிப்பர் லாரி மீது பைக் மோதியது. இதில் இஸ்மத் கான் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து கடலூர் முதுநகர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

கடலூர் மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ்,சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ்,புவனகிரி 37 டிகிரி செல்சியஸ்,காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ்,நெய்வேலி 37 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

பள்ளிகள் இன்று திறக்கப்பட்ட நிலையில் கடலூர் மஞ்சக்குப்பம் பகுதியில் உள்ள வேணுகோபாலபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு புழு கொடுத்து சாக்லேட் மற்றும் கிரீடம் வைத்து வரவேற்கப்பட்டனர்.இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏ ஐய்யப்பன் கலந்துகொண்டு அனைத்து மாணவர்களையும் பூ கொடுத்து வரவேற்றார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் உதவி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர்,திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் உள்ள மாநகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு பள்ளியிலேயே ஆதார் கார்டு எடுக்கும் சிறப்பு முகாம் இன்று நடைபெற்றது.இதனை கலெக்டர் அருண் தம்புராஜ், எம்எல்ஏ ஐய்யப்பன், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் மாணவிகளுக்கு ஆதார் கார்டு பதிவு செய்து உடனே ஆதார் கார்டு வழங்கப்பட்டது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர் இந்திரா கலந்து கொண்டார்.

கடலூர் வெள்ளக்கரை துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணி மேற்கொள்ள உள்ளதால் வெள்ளக்கரை, கிழக்கு ராமாபுரம், மேற்கு ராமாபுரம், மாவடிப்பாளையம், ஓதியடிக்குப்பம் , அரசடிக்குப்பம்,குறவன்பாளையம்,சாத்தங்குப்பம், வி.காட்டுப்பாளையம்,கீரப்பாளையம், கொடுக்கன்பாளையம் ஆகிய இடங்களில் நாளை (11-ம் தேதி) காலை 9 மணியில் இருந்து மதியம் 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என கடலூர் செயற்பொறியாளர் வள்ளி தெரிவித்துள்ளார்.

சிதம்பரம் அருகே உள்ள கொள்ளுமேடு கிராமத்தில் அல் அமான் கல்வி அறக்கட்டளை மற்றும் புதுச்சேரி மருத்துவ விஞ்ஞான நிறுவன (பிம்ஸ்) மருத்துவமனையும் இணைந்து இலவச மருத்துவ முகாமை நேற்று (ஜூன்-9) நடத்தியது. முகாமுக்கு பள்ளி தாளாளர் என்.அமானுல்லா தலைமை வகித்தார். மருத்துவ அலுவலர் தங்கதுரை முகாமை தொடங்கிவைத்தார். சமூகநல செயற்பாட்டாளர் ராயநல்லூர் ரவி பிரகாஷ், பள்ளி நிர்வாகி உவைஸ் , ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அலுவலக அறை மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் அறையின் முன்பு வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை மர்ம நபர்களால் உடைக்கப்பட்டது. இதில், கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்ணாடியும் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து புதுநகர் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் புதிய விற்பனை முனைய இயந்திரத்தில் தரவு தளபணிகள் மேற்கொள்ள இருக்கிறது.மேலும் முழுநேர ரேஷன்கடை விற்பனையாளர்களுக்கு புதிய விற்பனை முனைய இயந்திரம் வழங்கி,அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.இதனால் 11.6.2024 மற்றும் 12.6.2024 ஆகிய இரண்டு நாட்கள் கடலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகள் இயங்காது என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தெரிவித்தார்

கடலூரில் மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டு அரங்கில் மாவட்ட கிரிக்கெட் அகாடெமி கோப்பைக்கான மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 15.6.2024 அன்று தொடங்கி 22.6.2024 வரை நடைபெற உள்ளது. தினந்தோறும் காலை 8.30 மணிக்கும், மதியம் 12.30 மணிக்கு என 2 போட்டிகள் நடைபெற உள்ளது. இவை அனைத்தும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் மாவட்டத்தில் உள்ள 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

புவனகிரி மின்துறை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வரும் 12ம் தேதி மின் கம்பங்களில் தீ பந்தம் கட்டும் போராட்டம் நடைபெற உள்ளது. இரவில் லேசான மழை பெய்தாலே மின்சாரத்தை துண்டித்து நகரின் ஒரு சில பகுதிகளில் மட்டும் மின் இணைப்பை கொடுத்து விட்டு பல்வேறு பகுதிகளில் மின்சாரத்தை பல மணி நேரமாக கொடுக்காமல் இருக்கும் மின்வாரியத்தை கண்டித்து போராட்டம் நடைபெற உள்ள நோட்டீஸ் வெளியாகி உள்ளது
Sorry, no posts matched your criteria.