India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.
இந்நிலையில் நேற்று கடலூர் 37 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

இந்திய மாணவர் சங்கம் சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் நீட் தேர்வில் நாடு முழுவதும் நடைபெற்ற முறைகேடுகளின் மீது உரிய விசாரணை மேற்கொள்ளவும், தேர்வு நடத்துவதில் இருந்து தேசிய தேர்வு முகமை (NTA)எனும் தனியார் நிறுவனைத்தை விளக்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் சிவானந்த் தலைமையில் நடைபெற்றது.

சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், மகளிர் நலனுக்காக தொண்டாற்றிய சமூக சேவகர்கள், சமூக சேவை தொண்டு நிறுவனங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின்போது முதலமைச்சரால் விருது வழங்கப்படுகிறது. அதனால் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 2024ம் ஆண்டுக்கான சுதந்திர தின விருது பெற https://awards.tn.gov.in என்ற இணைய முகவரியில் ஜூன் 20ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

வேப்பூர் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் வருகின்ற 19ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை வேப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டரால் மனுக்கள் பெறப்படவுள்ளது . அதன்பிறகு பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள், பல்வேறு அரசு அலுவலகங்கள் மூலம் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள், செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் பள்ளி, கல்லூரி விடுதிகளில் 2024-25ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதில் பள்ளி விடுதிகளில் 4 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், கல்லூரியில் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ பயிலும் மாணவர்களும் தங்கி பயில விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் நேற்று தெரிவித்தார்.

கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அஞ்சலக சேமிப்பு வங்கி கணக்கு துவக்கம், ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சிக்கு ஐயப்பன் எம்எல்ஏ தலைமை தாங்கினார்.இதில் தலைமை ஆசிரியர் ஜெயந்தி, தபால் துறை கோட்ட கண்காணிப்பாளர் கணேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன் கலந்து கொண்டனர்.

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இன்று மனு கொடுக்க வந்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது,தமிழ்நாடு முழுவதும்100க்கும் மேற்பட்ட நுண் நிதி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இவைகள் அனைத்தும் பெண்களுக்கு தனிநபர் கடன் வழங்குகின்றன இதில் அதிக வட்டி வசூலிப்பதாகவும் பெண்கள் வட்டி கட்ட முடியாவிட்டால் மனரீதியாக தொல்லை கொடுப்பதாகவும் இதனை ஒழுங்குபடுத்த வலியுறுத்தினர்.

கடலூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் 24-25ம் ஆண்டிற்கான கடன் வழங்கும் லோன் மேளா கடலூரில் இன்று நடைபெற்றது.இதற்கு வங்கியின் இணைப்பதிவாளர் திலீப்குமார் தலைமை தாங்கினார்.இதையடுத்து மத்திய கூட்டுறவு வங்கியின் தலைமையக கிளை, புதுப்பாளையம், மஞ்சக்குப்பம், கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி ஆகிய 9 கிளைகளின் எல்லைக்குட்பட்ட பொதுமக்களுக்கு அரசு திட்டம் சார்ந்த கடன், விவசாயம் சார்ந்த கடன் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா அலுவலகங்களிலும் இன்று முதல் வருகிற 27-ம் தேதி வரை ஜமாபந்தி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடங்கியது. இதற்கு தனித் துணை ஆட்சியர் ரமா தலைமை தாங்கினார். தாசில்தார் பலராமன் முன்னிலை வகித்தார். இதையடுத்து பொதுமக்கள் குடும்ப அட்டை, பட்டா மாற்றம், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனு அளித்தனர்.

கடலூர் எம்.ஜி.ஆர் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2024-25ம் ஆண்டிற்கான 1 ஆண்டு முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சிக்கு சேர்க்கை நடக்கிறது.தகுதியுடையோர் நேற்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை www.tncu.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.மேலும் icmcuddrmgr@gmail.com என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என மண்டல இணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Sorry, no posts matched your criteria.