Cuddalore

News June 13, 2024

கடலூர் முதுநகர் துறைமுகத்தில் பணி

image

மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி தொடங்கி இன்றுடன் முடிவடைகிறது. மீன் இனப்பெருக்கத்திற்காக 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அரசால் விதிக்கப்படுகிறது. இந்த நிலையில் கடலூர் முதுநகர் துறைமுகம் பகுதியில் நாளை முதல் படகுகள் மீண்டும் மீன்பிடிக்க தயாராகி வருகின்றன. இதற்காக வலைகளை படகில் மீனவர்கள் ஏற்றினர்.பின்பு படகில் ஐஸ் கட்டி ஏற்றும் பணி நடைபெற்று வருகிறது.

News June 13, 2024

கடலூர்: வாழ்த்து தெரிவித்த மாநகர செயலாளர்

image

கடலூர் மாநகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் கே.ஸ்.ராஜா விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அன்னியூர் சிவாவை இன்று நேரில் சென்று சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் மாஜி நெய்வேலி நகர செயலாளர் புகழேந்தி மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

News June 13, 2024

கடலூர் மாவட்ட வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் வெப்பநிலை சற்று குறைந்து பதிவானது.இந்த நிலையில் நேற்று கடலூர் 35 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 36 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 37 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

News June 13, 2024

கடலூர் ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

image

கடலூர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,கடலூர் மாவட்டத்தில் செயல்படும் பணி புரியும் மகளிர் விடுதிகள் அரசு உரிமம் பெற்று நடத்த கட்டாயமாக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் விடுதிகள் அரசு உரிமம் பெறுதல்,உரிமம் புதுப்பித்தலுக்கு அரசு இணையதளம் www.tnswp.comல் பதிவு செய்து நகலை சமர்ப்பிக்க வேண்டும் பதிவு செய்யாமல் விடுதிகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

News June 13, 2024

கடலூர் அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

image

கிள்ளை அடுத்த கீழ்அனுபவம் பட்டு பனந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் சந்தோஷ். சலவை தொழிலாளி. இவர் இறந்து போன தனது தந்தைக்கு கர்ம காரியம் செய்ய நேற்று அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது குளத்தில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து சந்தோஷ் தாய் அரும்பு கொடுத்த புகாரின் பேரில் கிள்ளை உதவி ஆய்வாளர் குப்புசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றார்.

News June 12, 2024

கடலூர் இளைஞர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

தமிழக அரசு, துணிநூல் துறை மூலம் 10, 12ஆம் வகுப்பு முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி பயிற்சி பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற வலைதளத்தில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

News June 12, 2024

கடலூரில் மரக்கன்றுகள் நடும் விழா

image

ஈஷா யோக மையம் மற்றும் காவேரி குக்கரில் இயக்கம் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி கடலூர் சின்ன காட்டு சாலை பகுதியில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ராஜாராம் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டார். மற்றும் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இதில் தன்னார்வலர்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News June 12, 2024

கடலூர் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் வருகிற 15-ம் தேதி பொது விநியோகத் திட்ட குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. அதனால் பொதுமக்கள் பொது விநியோகத் திட்ட தொடர்பான மனுக்களை முகாமில் அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்துள்ளார்.

News June 12, 2024

கடலூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்வு

image

கடலூரில் தக்காளி விலை கிடுகிடு உயர்ந்தது.ஆந்திரா பகுதியில் இருந்து கடலூருக்கு தினமும் தக்காளி வருவதுண்டு இந்த நிலையில் ஆந்திராவில் கடும் மழை காரணமாக கடலூருக்கு தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் கடலூர் பகுதிகளில் தக்காளியின் விலை கடந்த நான்கு நாட்களில் கிடுகிடுவென உயர்ந்து.தற்பொழுது ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.50 முதல் 60 வரை விற்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

News June 12, 2024

கடலூர் அருகே பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர் 

image

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே அள்ளூர் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.போஸ்டரில் உரிய அனுமதி இன்றி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும்,கழிவு நீரை விவசாய நிலங்களில் திறந்து விடுவதாகவும்,அதிகாரிகள் இதனை கண்டு கொள்ளவில்லை எனவும் குற்றம் சாட்டி அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் கண்டனம் தெரிவித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது

error: Content is protected !!