India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூரில் கடந்த 2015 ஆம் ஆண்டு மணல் குவாரி மூடும் போராட்டத்தில் நடந்த தடியடி வழக்கில் தொடர்புடைய போக்குவரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கடலூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார். அப்போது திமுக மாநகர செயலாளர் ராஜா மற்றும் வழக்கறிஞர் பிரிவு அணியினர் அருகில் இருந்தனர். பின்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்த மாதம் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

கடலூரில் இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகள் வருகிற செவ்வாய்கிழமைக்கு பிறகு தமிழகத்தில் ஓடினால் கண்டிப்பாக பறிமுதல் செய்யப்படும். மீண்டும் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களாக மாற்றும் வரை பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்படாது என்றார்.

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மீண்டும் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

கடலூர், செம்மங்குப்பம் துணை மின் நிலையத்தில் நாளை (ஜூன் 15) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதால் காலை 9 மணி முதல் 4 மணிவரை, செம்மங்குப்பம், பெரியக்குப்பம், காரைக்காடு, கருவேப்பம்பாடி, சிப்காட் பகுதி, குடிகாடு, பூண்டியாங்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை நிறுத்தம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாத்தல்
தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தினை
கையெழுத்திட்டு தொடங்கிவைத்தார்.

கடலூர் மாவட்டத்தில் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று (ஜுன் 13) இரவு கடலூர் உதவி ஆய்வாளர் கணபதி, சிதம்பரம் காவல் ஆய்வாளர் கலையரசன், விருத்தாச்சலம் உதவி ஆய்வாளர் இராமலிங்கம், நெய்வேலி காவல் ஆய்வாளர் சுதாகர் மற்றும் சேத்தியாத்தோப்பில் உதவி ஆய்வாளர் சீனுவாசன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொள்ள உள்ளதாக கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கடலூரில் இன்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். பின்னர் அவர் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அதிகாரிகளுடன் சேர்ந்து பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாத்தல் தொடர்பான பதாகைகளை கையில் ஏந்தியபடி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் தொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தார். இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கடலூருக்கு இன்று வருகைதந்த கடலூர் எம்பி விஷ்ணு பிரசாத் மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், விசிக மாவட்ட செயலாளர் செந்தில், நகர செயலாளர் ராஜா, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் திலகர், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் சந்திரசேகர், சிபிஎம் நகர செயலாளர் உட்பட பலர் இருந்தனர்.

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார்.இதனைத் தொடர்ந்து இன்று அவர் கடலூர் மாநகரத்திற்கு வருகை புரிந்தார்.பின்பு அண்ணா, பெரியார், காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்பு திமுக கட்சி அலுவலகத்தில் தொண்டர்களுக்கு நன்றி கூறினார்.
Sorry, no posts matched your criteria.