Cuddalore

News June 19, 2024

சிதம்பரத்தில் போலி சான்றிதழ் கும்பல் சிக்கியது

image

சிதம்பரம் கோவிலாம்பூண்டி சாலையில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சான்றிதழ்கள் சிதறி கிடந்ததாக பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் சிதம்பரம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.ஆய்வு செய்ததில் போலி சான்றிதழ் என தெரிந்தது.அத்துடன் கிடந்த ரசீதில் இருந்த சங்கர் தீட்சதர் என்பவரை காவல்துறை விசாரித்தனர்.அதில் நாகப்பன் என்பவருடன் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

News June 19, 2024

கடலூர் மாவட்ட வெப்பநிலை நிலவரம்

image

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வெப்பநிலை அதிகரித்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் நேற்று கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 37 டிகிரி செல்சியஸ், புவனகிரி 37 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 37 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 38 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 38 டிகிரி செல்சியஸ், திட்டக்குடி 38 டிகிரி செல்சியஸ் மற்றும் பண்ருட்டியில் 38 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

News June 19, 2024

கடலூர்: 67 போலீஸ் ஏட்டுகள் பதவி உயர்வு

image

கடலூர் மாவட்டத்தில் திருப்பாபுலியூர் ஏட்டுகள் அன்வர்அலி,ஜெயக்குமார்,புதுநகர் ஏட்டுகள் பத்மநாபன்,வெற்றிசெல்வன்,ராஜாராம்,உலகநாத, போக்குவரத்து பிரிவு ஏட்டுகள் மணிகண்டன்,பத்மநாபன்,முதுநகர் ஏட்டு சிவா உள்பட 59 தாலுகா போலீஸ் ஏட்டுகளும்,ஆயுதப்படை போலீஸ் ஏட்டுகள் 8 பேர் என மொத்தம் 67 ஏட்டுகள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து விழுப்புரம் சரக டி.ஐ.ஜி. திஷாமித்தல் உத்தரவிட்டுள்ளார்.

News June 19, 2024

கடலூர்: 22, 23-ம் தேதிகளில் மாபெரும் கபாடி போட்டி

image

கடலூர் உண்ணாமலை செட்டி சாவடியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயில் அருகில் வருகிற 22 மற்றும் 23-ம் தேதிகளில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கபாடி போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டி 22-ம் தேதி மாலை 3 மணிக்கு துவங்கும். போட்டியில் பங்கேற்பவர்கள் கட்டாயம் ஆதார் அட்டை கொண்டு வர வேண்டும். ஆட்டம் அனைத்தும் செயற்கை ஆடுகளத்தில் நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகளை உண்ணாமலை செட்டிசாவடி மக்கள் செய்து வருகின்றனர்.

News June 18, 2024

திருநங்கைகளுக்கு 21-ல் முகாம்: கலெக்டர் அறிவிப்பு

image

கடலூர் மாவட்டத்தில் சமூக நலத்துறையின் மூலம் திருநங்கைகளின் விவரங்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்குதல், ஆதார் அட்டை திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவற்றை வழங்கிட சம்பந்தபட்ட துறைகள் ஒருங்கிணைந்து வருகிற 21-ம் தேதி காலை 10 மணிக்கு திருநங்கைகளுக்கான சிறப்பு முகாமை கடலூரில் நடத்துகிறது என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

News June 18, 2024

புதிய வீடு கட்டியவர்களுக்கு கலெக்டர் அறிவிப்பு

image

கடலூரில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 1.10.2023 முதல் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு மனை வரன்முறை அனுமதி மற்றும் கட்டிட வரைபட அனுமதி ஆகியவற்றை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இணையதளம் மூலம் மட்டுமே பெற வேண்டும்.நேரடி அனுமதி பெற்றிருந்தால் செல்லாது.மேலும் நேரடியாக அனுமதி பெற்றிருப்பின் அவற்றை தற்போது, முறைப்படுத்திக் கொள்ள வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

News June 17, 2024

கடலூர் வழியாக சிறப்பு ரயில் இயக்கம்

image

கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தாம்பரத்தில் இருந்து கடலூர் வழியாக ராமநாதபுரத்திற்கு ஜூன் 21, 23, 28, 30 மற்றும் ஜூலை 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இது தாம்பரத்தில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு கடலூருக்கு 10.55 மணிக்கு வந்து செல்கிறது. மறுமார்க்கமாக மாலை 3 மணிக்கு ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு கடலூருக்கு இரவு 11.05-க்கு வந்து செல்கிறது.

News June 17, 2024

சிதம்பரத்தில் ஈகத் மைதானத்தில் பக்ரீத் தொழுகை

image

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று ஈகத் மைதானத்தில் பக்ரீத் கூட்டுத் தொழுகை அனைத்து
இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஏராளமான இஸ்லாமியர்கள் திரளாக கலந்துக்கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுப்பட்டனர். இந்நிகழ்ச்சியை அனைத்து ஜமாத் அமைப்பினரும் ஒன்றிணைந்து பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகைக்கான ஏற்பாடுகளை செய்யதிருந்தனர்.மேலும் பக்ரீத் வாழ்த்துகளை ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொண்டனர்.

News June 17, 2024

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு தொழுகை

image

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கடலூர் முதுநகர் பகுதியில் உள்ள ஜும்மா மஸ்ஜித் பள்ளிவாசல் எதிரில் உள்ள திடலில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் டவுன்ஹாலில் மற்றும் மஞ்சகுப்பம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதற்காக இன்று அதிகாலையில் எழுந்து புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் ஈகை திருநாளை வாழ்த்துக்கள் சொல்லி பரிமாறி கொண்டனர்.

News June 17, 2024

கடலூர் ரேஷன் கடைகளில் கால அவகாசம்

image

கடலூர் மாவட்டத்தில் கடந்த மே மாதம் பெரும்பாலான மக்களுக்கு ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு வழங்கவில்லை. அதனால் பருப்பு, பாமாயில் கிடைக்க பெறாத குடும்ப அட்டைதாரர்கள் வருகிற ஜூன் 30-ந்தேதி வரை ரேஷன் கடைகளுக்கு சென்று பெற்றுக்கொள்ள கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

error: Content is protected !!