India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கடலூர் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வுத் துறை போலீசார் நேற்று சிதம்பரம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது சிதம்பரம் அருகே உள்ள அத்தியாயநல்லூர் கிராமத்தில் வந்த மினி லாரியை பரிசோதித்தனர். அதிலிருந்த டிரைவர்ஓட முயற்சி செய்தார்.அவரை பிடித்து விசாரிக்கையில் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 3 நபர்கள் சுமார் 1100 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியது தெரிய வந்தது.மேலும் அந்த 3 நபர்கள் கைது

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024-2025-ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு கலந்தாய்வு மற்றும் முதலாம் கட்ட கலந்தாய்வு கடந்த 14.6.2024 வரை நடந்தது. இந்த நிலையில் இரண்டாவது கட்ட கலந்தாய்வு வருகிற 24-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை நடக்கிறது என கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்,அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கு சிறப்பு குறைத்தீர்க்கும் கூட்டம் வருகிற 27ம் தேதி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அதனால் இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்,அவர்தம் குடும்பத்தினர் தங்களது கோரிக்கையை மனுவாக அளித்து பயன்பெறலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் இன்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட ஊராட்சி குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் திருமாறன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கவுன்சிலர்கள் பேசியதாவது,நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாக்க உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். கடலூரில் இஎஸ்ஐ ஆஸ்பத்திரி கட்ட வேண்டும். மேலும் விக்கிரவாண்டி-தஞ்சாவூர் சாலையில் மின்விளக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என பேசினார்.

கடலூர் மாவட்ட பித்தளை பாத்திர தொழிலாளர் சங்கத்தின் ஆண்டு பேரவை கூட்டம் கடலூரில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சிஐடியு மாவட்ட செயலாளர் பழனிவேல், மாவட்ட துணை தலைவர் சுப்புராயன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் புதிய கூலி உயர்வு சம்பந்தமாக பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கடலூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வெயிலின் தாக்கம் குறைந்து கொண்டே வருகிறது.இந்த நிலையில் கடலூர் 36 டிகிரி செல்சியஸ், சிதம்பரம் 36 டிகிரி செல்சியஸ், புவனகிரி 36 டிகிரி செல்சியஸ், காட்டுமன்னார்கோயில் 36 டிகிரி செல்சியஸ், நெய்வேலி 37 டிகிரி செல்சியஸ், விருத்தாசலம் 36 டிகிரி செல்சியஸ் மற்றும் திட்டக்குடியில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை அறிவியல் தாவரவியல் துறையில் 2-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 15 நாட்கள் வேளாண் பயிற்சி பெற்றனர். இதையடுத்து பயிற்சி நிறைவு பெற்றதையடுத்து நேற்று மாணவர்களுக்கு வேளாண் விஞ்ஞானிகள் காயத்ரி, கண்ணன், மோதிலால் ஆகியோர் சான்றிதழ்கள் வழங்கினர். இதில் பேராசிரியர்கள் பரமசிவம், சரவணகுமார், மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

காட்டுமன்னார்கோயில் தாலுகா எள்ளேரி (மேற்கு) கிராமத்தில் இன்று இரவு 7 மணியளவில் இடிமின்னலுடன் கன மழை பெய்தது. அப்போது வீசிய சூறைக்காற்றில் எள்ளேரியில் சாலையோரம் இருந்த மரத்தின் கிளை முறிந்து, அருகில் நின்ற அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மனைவி கலா (42) மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்தார். இதுகுறித்து காட்டுமன்னார்கோயில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூரில் உள்ள தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தபால் சேவை மக்கள் குறைகேட்பு கூட்டம் 21ஆம் தேதி நடக்கிறது. இதில் தபால் சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்சனைகள், புகார்கள் போன்றவை விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும். மேலும் விவாதத்துக்கான புகார்கள் மற்றும் குறைகள் ஏதாவது இருந்தால், அவைகளை தபால் மூலம் அனுப்பி வைக்கலாம் என தபால் அலுவலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் இன்று தெரிவித்தார்.

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வருகின்ற 21ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.இதில் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தேர்வுசெய்து உடனடியாக பணி நியமன ஆணை வழங்குகின்றனர்.அதனால் 10 மற்றும் 12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு படித்த இளைஞர்கள் முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருண் தம்புராஜ் இன்று தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.