Cuddalore

News June 23, 2024

கடலூர்: வீடு கட்ட ஆணை வழங்கிய அமைச்சர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நீர்வளத் துறை சார்பில் ரூ.81.12 கோடி மதிப்பீட்டிலான கொள்ளிடம் வடிநிலக் கோட்டம் அருவாள்மூக்கு வெள்ளத் தடுப்பு திட்டப்பணிகள் இன்று கடலூர் அருகே திருச்சோபுரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் என்.எல்.சி நிறுவனத்தின் சார்பில் வீடுகட்டுவதற்கான ஆணைகள் மற்றும் காசோலையை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் அவர்கள் வழங்கினார்.

News June 23, 2024

கடலூரில் இடி,மின்னலுடன் மழை!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (23) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .

News June 23, 2024

சிதம்பரம் பல்கலைக்கழகத்தில் திறப்பு விழா

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக கட்டடவியல் துறையில் 1972-77ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் கருத்தரங்கு அறை புதுப்பிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று (ஜூன் 23) மாலை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு புல முதல்வர் சி.கார்த்திகேயன் தலைமை வகித்தார். கட்டடவியல் துறை தலைவர் எஸ்.பூங்கோதை முன்னிலை வகித்தார். கருத்தரங்கு அறையை பதிவாளர் ஆர்.சிங்காரவேல் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

News June 22, 2024

கடலூரில் பலத்த மழை

image

கடலூரில் இன்று (22-ம் தேதி) காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது. இந்நிலையில் இரவு 8.30 மணியளவில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது சூறைக்காற்றும் வீசியதால் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. இந்த மழை சுமார் 9.30 மணி வரை நீடித்தது. இதனால் அனைத்து பகுதிகளிலும் சாலைகளில் ஆறாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

News June 22, 2024

கடலூரில் தள்ளுமுள்ளு

image

பாரதிய ஜனதா கட்சி சார்பில் கள்ளக்குறிச்சி பகுதியில் விஷசாராயம் அருந்தி உயிரிழப்பை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே இன்று பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அப்பொழுது, போலீசார் இதற்கு அனுமதி இல்லை எனக் கூறி அவர்களை கைது செய்ய முற்பட்ட போது பெரும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதில் 200க்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

News June 22, 2024

கடலூர் மாவட்டத்தில் மழை!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, கடலூர் உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .

News June 22, 2024

சேவை புரிந்தவர்களுக்கு கலெக்டர் அழைப்பு

image

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள் மற்றும் சேவை புரிபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு விருது பெற தகுதியானவர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக ஜூன் 5-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.

News June 22, 2024

கடலூரில் ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து புலனாய்வு நடத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் மாதவன் தலைமை தாங்கினார்.

News June 22, 2024

கடலூர் நீதிமன்ற வளாகத்தில் மருத்துவ முகாம்

image

கடலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, கடலூர் பார் அசோசியேஷன், லாயர்ஸ் அசோசியேஷன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை கடலூர், ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை புதுச்சேரி இணைந்து கடலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள், உதவியாளர்கள், ஊழியர்கள், காவலர்கள் ஆகியோருக்கு முதன்மை மாவட்ட நீதிபதி ஜவகர் உத்தரவின் பேரில் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது.

News June 22, 2024

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

image

குறிஞ்சிப்பாடி அடுத்த சின்னதானங்குப்பம் கிராம மக்கள் இன்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், தனியார் செல்போன் நிறுவனம் சார்பில் வீடுகளுக்கு இடையே மொபைல் டவர் அமைக்கப்படுகிறது. இதனால் கதிர்வீச்சால் மக்களுக்கும் உடல்நலம் பாதிக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மொபைல் போன் டவர் அமைக்கும் பணியை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

error: Content is protected !!